தமிழ்நாடு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு - முதல்வர் ஸ்டாலின்..!!
🔷டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
🔷விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏழு தமிழக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது மகிழ்ச்சி. ஏற்கெனவே வாள்சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வீரர்களுக்கும் அந்த ஊக்கத் தொகை இன்று வழங்கப்படுகிறது.
🔷உலக அரங்கில் விளையாடும் வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 2 கோடியும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1 கோடியும் தமிழக அரசால் வழங்கப்படும். தமிழக வீரர்களே சென்று வருக, தரணியை வென்று வருக என்று பேசினார்.
🔷ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறு விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.
சென்னை-பாரிஸ் இடையே முதன் முறையாக நேரடி விமான சேவை..!!
🔷பிரான்ஸ் தலைநகரான பாரிசிஸ் - சென்னை இடையே முதன்முறையாக நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் நிறுவனம் துவக்கி உள்ளது.
🔷இதுவரை சென்னையில் இருந்து பாரிசுக்கு செல்பவர்கள் டெல்லி, மும்பை அல்லது பெங்களூர் வழியாகவோ அல்லது துபாய் வழியாகவோ செல்லும் நிலை இருந்து வந்தது.
🔷இந்த நிலையில் இன்று (ஜூன் 26) காலை 10.25 மணிக்கு பாரிசில் இருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் நேரடியாக இரவு 11.45 மணிக்கு சென்னை வந்தடையும். 28 ஆம் தேதி காலை 1.20 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து பாரிசுக்கு புறப்படும்.
செயற்கைக்கோள் / ஏவுகணை
பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி மிகுந்த சூரிய ஒளி தகடுகளை அமைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை..!!
🔷பூமிக்கு மேல் 410 கிலோ மீட்டர் தொலைவில் சூரிய ஒளி தகடுகளை அமைக்கும் பணியில் நாசாவின் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர்.
🔷இதற்காக இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெளியே மிதந்தனர்.
🔷நாசா விஞ்ஞானியான ஷேன் கிம்பரோவும் பிரான்ஸ் விஞ்ஞானியான தாமஸ் பெஸ்குயிட் ஆகியோர் வெற்றிகரமாக சக்திவாய்ந்த சோலார் தகடுகளை நாசாவின் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு வெளியே அமைத்தனர்.
தரவரிசை
உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசை வெளியீடு..!!
🔷உலக அளவில் சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் 2 கல்லூரிகள் இடம் பெற்று உள்ளன.
🔷வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி 49-ஆவது இடத்திலும், சென்னை மருத்துவ கல்லூரி 64-ஆவது இடத்தையும் பிடித்து உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியா அளவில் 6 மருத்துவ கல்லூரிகள் உலகின் சிறந்த 100 மருத்துவ கல்லூரி தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளது.
🔷எய்மஸ் மருத்துவக் கல்லூரி 23-ஆவது இடத்திலும், புனே ராணுவ மருத்துவக் கல்லூரி 34-ஆவது இடத்தையும் பிடித்து உள்ளன. மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59-ஆவது இடத்தையும், வாரணாசி இந்தியன் இஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி 72-ஆவது இடத்திலும் உள்ளன.