தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள்  24.9.2021 (Daily Current Affairs)

கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா கண்டுபிடிப்பு..! !

🔷செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

🔷4.2 ரிக்டர் அளவு கொண்ட அரை மணி நேர நீண்ட ஒரு நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டதாக நாசா கூறி உள்ளது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும்.

🔷இதற்கு முன்பு, ஆகஸ்ட் 25 அன்று 4.2 மற்றும் 4.1 ரிக்டர் அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்களை இன்சைட் லேண்டர் பதிவு செய்து உள்ளது. இருப்பினும், சமீபத்திய நிலநடுக்கம் முந்தைய பதிவுகளை விட ஐந்து மடங்கு வலிமையானது என்று நாசா கூறி உள்ளது.

🔷2019 இல் 3.7 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இன்சைட் லேண்டர் கிட்டத்தட்ட 8,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நீண்ட தூரத்திலிருந்து ஒரு பெரிய அதிர்வைக் கண்டறிந்தது இதுவே முதல் முறையாகும். நாசா விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம்

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு..!!

🔷அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

🔷அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூமெக்சிகோ மாகாணத்தில் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வின்போது, ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்தனர். வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரிக்கரையில் இந்த புதைபடிவ காலடி தடங்கள் கண்டறியப்பட்டதாகவும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் காலடி தடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

🔷இந்த கண்டுபிடிப்பு, இடம்பெயர்வு குறித்து நீண்ட காலமாக நிலவும் மர்மத்துக்கு வெளிச்சம் காட்ட உதவும் என்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்தனர் என்பதை கண்டறிய வழிவகை செய்யும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

🔷இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில் “ஆசியாவை, அலாஸ்காவுடன் இணைத்த நிலப் பாலம் வழியாக முந்தையை மனித இடப்பெயர்வுகள் இருந்ததாக நம்படுகிறது. 13,000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மனித குடியேற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

🔷தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவ காலடி தடங்கள் அதை உறுதி செய்கின்றன. இந்த காலடி தடங்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி இந்த தடங்களை புகைப்படங்களாக எடுத்துக் கொள்வது மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை தெளிவாக்குவது ஆகும்” என்றனர்.

இந்தியா

மகாராஷ்டிராவில் 12 மணி நேரமாக இருந்த பெண் காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு..!!

🔷மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

🔷இது தொடர்பாக அறிவித்த அம்மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே, பெண் காவலர்களின் பணிநேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.

🔷ஏற்கனவே மராட்டியத்தில் சில இடங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டாலும், மாநிலம் முழுவதும் இனி படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷12 மணி நேர பணி நேரத்தால் தங்களது குடும்ப வாழ்க்கை பாதிப்பதாக, பெண் காவலர்கள் பலர் டிஜிபியிடம் முறையிட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

பிரான்சில் கண் பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக ஸ்டிக் - இடையூறுகளுக்கு ஏற்ப சிக்னல் கொடுக்கும் கருவி..!!

🔷பிரான்சில் கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க ஏதுவாக தனியார் நிறுவனம் ஒன்று அதிநவீன சென்சார் பொருத்திய கேட்ஜெட்டை உருவாக்கி உள்ளது.

🔷கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க பயன்படுத்தும் ஒயிட் கேன் என்றழைக்கப்படும் வெள்ளை நிற கூச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று பிரத்யேக சென்சார் கொண்ட கருவியை பொருத்தி உள்ளது.

🔷இந்த கருவி கொண்டு சாலையை கடக்கும் போது திசைக்கு ஏற்றார்போல் ஏற்படும் இடையூறுகளை பயன்படுத்துவோரின் காதுகாளுக்கு அலாரம் மூலம் சிக்னலாக வழங்கி விலகிச் செல்ல உதவுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...