தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.8.2021 (Daily Current Affairs)

சினிமா

மெல்போர்ன் விருதுகள் 2021 - இந்தியத் திரைப்பட விருது விழா..!

💠சமீபத்திய மெல்போர்ன் விருதுகளின் இந்தியத் திரைப்பட விருது விழாவில் ஃபேமிலி மேன் 2 திரைப்படத்தின் நடிகர்கள் மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் விருதுகளை வென்றுள்ளனர்.

💠சிறந்த திரைப்படத்திற்கான விருதானது ‘சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

💠சிறந்த நடிகருக்கான விருதானது (திரைப்படம்) சூர்யா சிவக்குமாருக்கு (சூரரைப் போற்று) வழங்கப்பட்டது.

💠சிறந்த இயக்குனருக்கான விருதானது அனுராக் பாசு (லூடோ) என்பவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு

3D தொழில்நுட்பத்தில் ஓவியப்போட்டி - முதல் பரிசு பெற்று இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்து 4 வயது சிறுமி சாதனை..!!

💠3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 4 வயது சிறுமி, முதல் பரிசு பெற்று இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார்.

💠தேனி திட்டச்சாலையில் வசிக்கும் கவிதா என்பவரின் 4 வயது மகள் தவயாழினி, அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

💠4 வயது சிறுவர், சிறுமிகளுக்கு நிலப்பகுதி வரைபடங்களை காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் 3டி தொழில்நுட்பத்தில் ஓவியப் போட்டியை இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் நடத்தியது. இந்த போட்டியில், சிறுமி தவயாழினி பங்கேற்று தமிழகத்தில் முதல் பரிசு பெற்றார்.

தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்..!!

💠தமிழகத்தில் 6 உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. இதில், தாம்பரமும் அடங்கும். இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தின் மொத்த மாநகராட்சிகளின் என்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

💠சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

💠"2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021 ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது.

💠தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

💠திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்".

உலகம்

அமெரிக்கா - நியூயாா்க்கின் முதல் பெண் ஆளுநா் பதவியேற்பு..!!

💠அமெரிக்காவிலுள்ள நியூயாா்க் மாகாணத்தின் முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல் பதவியேற்றுக் கொண்டாா். 62 வயதாகும் அவா், 16 மாதங்களுக்கு ஆளுநா் பொறுப்பை வகிப்பாா்.

💠இதுவரை ஆளுநராக இருந்து வந்த ஆண்ட்ரூ குவாமோ மீது அடுக்கடுக்காக பாலியல் புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து அவா் பதவியை ராஜிநாமா செய்தாா். அதனைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு கேத்தலீன் ஹோக்கல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

💠அவரையும் சோ்த்து, தற்போது அமெரிக்காவின் 9 மாகாணங்களில் பெண்கள் ஆளுநா்களாக உள்ளனா். இது, அந்த நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இந்தியா

அயோத்தி நகரை முழு சோலார் நகராக மாற்ற உத்தர பிரதேச அரசு முடிவு..!!

💠ராமர் கோவில் கட்டுப்பட்டுவரும் அயோத்தியா நகரை,முழுமையான சோலார் எனப்படும் சூரிய ஒளிசக்தி நகராக மாற்ற உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

💠இதற்கான விரிவான திட்ட அறிக்கையை L&T நிறுவனம் தயாரித்து வருகிறது. அதன்படி ராமர் கோயிலில் சூரியமின்சக்தி உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான சமுதாய சமையலறை உள்ளிட்ட கோவிலின் அனைத்து மின் தேவைகளுக்கும் சூரியமின்சக்தியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

💠அத்துடன் தங்களது வீடுகளில் சூரிய மின்தகடுகளை பொருத்த முன்வருபவர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகை சலுகைகளை அளிக்கும் வகையில் தனது 2017 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையில் திருத்தங்களை கொண்டு வரவும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...