தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.6.2021(Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 24.6.2021(Daily Current Affairs)

உலகம்

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான குரேஷியாவின் கடலோரப் பகுதியில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூழ்கிய ஒரு பழமையான தீவுப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது..!

🔷தொல்லியல் ஆய்வாளர் Mate Parica என்பவர், அந்நாட்டின் லூம்பர்டா என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரின் கடலோரப் பகுதியை செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்தார். கடலுக்கு அடியில் ஒரு வித்தியாசம் இருப்பதை கண்ட Mate Parica, பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கி, தரைப்பகுதியில் கிடைத்த பொருட்களை சேகரித்தார்.

🔷பிரதான நிலப்பரப்புடன் இந்த பகுதி இணைக்கப்பட்டு இருந்தது முதற்கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்தஅதிசய தீவின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

உலக தலைவர்கள் பட்டியலில் செல்வாக்கு சரிந்தாலும் முதலிடத்தில் பிரதமர் மோடி..!!

🔷பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடு 66 சதவீதமாக சரிந்துள்ளது ஆனால் மற்ற உலக தலைவர்களை விட அதிகம் உள்ளது.

🔷அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற உலகளாவிய தலைவர்களை விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறி உள்ளது.

ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் பைடன் வழங்கிய சிறப்பு பரிசு..!!

🔷ஸ்சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்டனர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ரஷிய அதிபருடன் நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு என்பதால் உலகின் கவனம் இந்த சந்திப்பின் பக்கம் திரும்பியது.

🔷இந்நிலையில் இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்கக் காப்பால் செய்யப்பட்ட கண்கண்ணாடியை பரிசளித்துள்ளார்.

🔷அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பல்வேறு முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம்.

🔷மேலும் புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அர்மேனியா பிரதமராக நிகோல் பாஷினியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!!

🔷அர்மேனியாவின் செயல் பிரதம மந்திரி நிகோல் பாஷினியன் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரத்தை வைத்திருந்தார், இது கடந்த ஆண்டு நாகோர்னோ-கராபாக் உறைவிடத்தில் இராணுவத் தோல்விக்கு பரவலாகக் குற்றம் சாட்டப்பட்ட போதிலும் அவரது அதிகாரத்தை உயர்த்தியது. நிக்கோலின் சிவில் கான்ட்ராக்ட் கட்சி 53.92% வாக்குகளைப் பெற்றது.

🔷கணக்கிடப்பட்ட 100% நிலப்பரப்புகளிலிருந்து வாக்குச்சீட்டை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளின்படி அவரது போட்டியாளரான முன்னாள் தலைவர் ராபர்ட் கோச்சார்யன் தலைமையிலான ஒரு கூட்டணி 21% உடன் இரண்டாவது இடத்தைப் பிடித்ததார். கோச்சார்யன் 1998 முதல் 2008 வரை ஆர்மீனியாவின் ஜனாதிபதியாக இருந்தார்.

இந்தியா

உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட ரப்பர் மரம் அசாமில் நடப்பட்டது..!!

🔷அசாமில் உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட (GM) ரப்பர் மரக்கன்று ரப்பர் ஆலை வாரியத்தால் குவாஹாட்டிக்கு அருகிலுள்ள சருடாரியில் உள்ள போர்டு பண்ணையில் நடப்பட்டது.

🔷கேரளாவின் கோட்டயம் புத்துப்பள்ளியில் உள்ள இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RRII) இந்த மரபனு மாற்றப்பட்ட GM ரப்பர் மரக்கன்று உருவாக்கப்பட்டது.

மாநாடுகள்

பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்த 2 நாள் உச்சிமாநாட்டை பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து இந்தியா ஜூன் 22 ஆம் தேதி நடத்தியது.

🔷காற்று அல்லது சூரிய மின்சக்தி மூலம், மின்னாற்பகுப்பு முறையில், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதுதான் பசுமை ஹைட்ரஜன்.

🔷இந்நிகழ்ச்சியை மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி(தேசிய அனல் மின் நிறுவனம்) நடத்துகிறது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் நிபுணர்கள் கலந்து கொண்டு எதிர்காலத்தில் எரிசக்தியில் ஹைட்ரஜனை கலப்பது குறித்து விரிவாக விவாதித்தார்.

🔷பசுமை ஹைட்ரஜனை பல வகைகளில் பயன்படுத்தலாம். அம்மோனியா மற்றும் மெத்தனால் போன்ற பசுமை ரசாயணங்களை, உரங்கள், மின்சாரம், இயக்கம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் பயன்படுத்த முடியும். மேலும் எஃகு மற்றும் சிமெண்ட் துறையில், பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளன. தங்கள் நாட்டின் வளங்கள் மற்றும் பலம் அடிப்படையில் பல நாடுகள் தங்களின் உத்திகளையும், திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது.

விருதுகள்

ஐநாவின் நில பாதுகாப்பு விருது..!!

🔷ஷ்யாம் சுந்தர் ஐநாவின் நில பாதுகாப்பு விருதை பெற்றார்.

🔷இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஷ்யாம் சுந்தர் ஜியானி 2021 ஆம் ஆண்டிற்கான ஐநாவின் நில பாதுகாப்பு விருதை பெற்றுள்ளார்.

🔷இவர் 15 வருடமாக குடும்ப வனவியல் என்ற கொள்கையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


Share Tweet Send
0 Comments
Loading...