தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 23.9.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு - துவக்கி வைத்தார் முதலமைச்சர்..!

🔷ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூரில் சூரிய மின்சக்தி பூங்கா தொடங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

🔷சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைத்ததன் அடையாளமாக விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கினார்.

🔷அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்த முதலமைச்சர், வரும் காலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது என்றார்.

🔷மின் இணைப்பை பெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், 6 ஆண்டுகாலமாக காத்திருந்த நிலையில், தற்போது மின் இணைப்பு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியா

தொழில் தொடங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல் - 23 ஆவது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு..!!

🔷உலக அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சிறந்த சூழல் அமைந்துள்ள நகரங்களின் வருடாந்திரப் பட்டியலில் பெங்களூரு 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டைவிட அந்தப் பட்டியலில் பெங்களூரு 3 இடங்கள் முன்னேறியுள்ளது.

🔷சா்வதேச அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற பல்வேறு சூழல்களின் அடிப்படையில் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சோ்ந்த ‘ஸ்டாா்ட்டப் ஜினோம்’ அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

🔷இந்த ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் புது டெல்லி 36 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை நகரம் வளா்ந்து வரும் சூழல் அமைப்புகளைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

🔷தொழில்முனைவுக்கான சிறந்த சூழலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னேறியிருப்பதற்கு, அந்த நகரில் முதலீடுகளின் வளா்ச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது.

🔷குறிப்பாக, உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்த நகரில் 130 கோடி டாலா் (சுமாா் ரூ.9,594 கோடி) முதலீடு செய்துள்ளது. சமூக ஊடக நிறுவனமான ஷோ்சாட் பெங்களூருவில் 50.2 கோடி டாலா் (சுமாா் ரூ.3,706 கோடி) முதலீடு செய்துள்ளது. கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூ இந்த நகரில் 46 கோடி டாலா் (சுமாா் ரூ.3,396 கோடி) முதலீடு செய்துள்ளது.

🔷இந்தப் பட்டியலில் டெல்லியின் தொழில்முனைவுச் சூழல் வளா்ச்சியடைந்து வருவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் 1,210 கோடி டாலரை (சுமாா் ரூ.89,275 கோடி) முதலீடாகப் பெற்றுள்ளதாக இந்தப் பட்டியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்திலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியமனங்கள்

பிரிட்டன் கடற்படை கவுரவ தளபதியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் நியமனம்..!!

🔷ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகர் டேனியல் கிரேக்கை கவுரவ தளபதியாக நியமித்து பிரிட்டன் கடற்படை அறிவித்துள்ளது.

🔷கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் டேனியல் கிரேக், கடைசியாக நடித்த 'நோ டைம் டு டை' படம் வரும் 30 ஆம் தேதி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔷ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் துப்பறியும் கதாபாத்திரமாக வரும் டேனியல் கிரேக்கை கவுரவ தளபதியாக நியமித்து பிரிட்டன் ராயல் கடற்படை தளபதி அறிவித்துள்ளார்.

ஒடிசாவின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற தமிழக டி.ஜி.பி. திரிபாதி நியமனம்..!!

🔷ஒடிசாவை சேர்ந்த திரிபாதியை மாநில தலைமை தகவல் ஆணையராக நியமித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

🔷ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த சுனில் மிஸ்ரா கடந்த மாதம் 15 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் காலியாக இருந்த அந்த பதவிக்கு ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளார். 1985 ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் ஆவார்.

🔷ஒடிசாவை சேர்ந்த இவரை மாநில தலைமை தகவல் ஆணையராக நியமித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜே.கே.திரிபாதியின் பெயர் இறுதி செய்யப்பட்டு, கவர்னர் கணேஷி லாலின் ஒப்புதலும் பெறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...