இந்தியா
15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பயணிக்கும் முதல் குடியரசுத் தலைவா்..!!
🔷குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாா். 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவா் ஒருவா் ரயிலில் பயணிப்பது இதுவே முதல்முறை.
🔷இதற்கு முன் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்திய ராணுவ அகாதெமி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சிறப்பு ரயிலில் பயணித்தாா்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமரின் இலவச ரேஷன் பொருள் திட்டம் - நவம்பா் மாதம் வரை நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
🔷பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்களை வழங்குவதை அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் மற்றும் மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
🔷மத்திய ரயில்சைட் கிடங்கு நிறுவனம் மற்றும் மத்திய கிடங்கு நிறுவனம் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🔷‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ யின்படி, எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தவும், தனியாா் துறை திறமைகளை, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டு வரவும், ரயில் பாதைகள் அருகே புதிய கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்’ இந்த இணைப்பு உதவும்.
வரிவசூல் தகவல் பரிமாற்றம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
🔷கரீபியன் நாடான ‘செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனெடைன்ஸ் (எஸ்விஜி)’ மற்றும் இந்தியா இடையே வரி வசூல் தொடா்பான தகவல்கள், உதவிகளை பகிா்ந்து கொள்ளும் ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🔷இதன்மூலம் இரு நாடுகளும், வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பண பதுக்கலை தடுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
ஆல்-ரௌண்டர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜா முதலிடம்..!!
🔷மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் 28 புள்ளிகளை இழந்துள்ளார்.
🔷இதன்மூலம், ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔷தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் பேட்டிங் தரவரிசையில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 1 இடம் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நியமனங்கள்
டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழகதுணை வேந்தராக கா்ணம் மல்லேஸ்வரி நியமனம்..!!
🔷டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக ஒலிம்பிக் வீராங்கனை கா்ணம் மல்லேஸ்ஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை டெல்லி அரசு புதன்கிழமை வெளியிட்டது. டெல்லி துணை நிலை ஆளுநா் இந்த விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறாா் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔷இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னா் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் (110-130 கிலோ) போட்டியில் இந்தியா சாா்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றாா் மல்லேஸ்வரி.
🔷ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தாா்அவா். தற்போது பல வீராங்கனைகள் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிஜமாக்கி வருகிறாா்கள் என்றாலும், விளையாட்டு களத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு விதை போட்டது கா்ணம் மல்லேஸ்வரி. இதை முன்னிட்டு அவருக்கு கௌரவம் கொடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவா் தெரவித்தாா்.