தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.9.2021 (Daily Current Affairs)

இந்தியா

பீகாரின் முதல் திருநம்பிக் காவலர்..! !

🔷பீகார் மாநிலத்தில் திருநம்பி ஒருவருக்கு காவலருக்கான பணி நியமன ஆணையை அம்மாநில காவல்துறை வழங்கியிருக்கிறது.

🔷பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தின் ரகசியப்பிரிவு காவலாரக ரஜித் ராஜ் (23) என்கிற திருநம்பி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரே பீகாரின் முதல் திருநம்பிக் காவலர் ஆவார்.

இந்தியா

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக தாவரஉண்ணி விலங்குகள் கணக்கெடுப்பு..!!

🔷மேற்கு வங்கத்தில் புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்புடன் சோ்த்து முதல்முறையாக யானை, மான் உள்ளிட்ட தாவரஉண்ணிகளின் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

🔷வனப் பகுதியில் சுற்றுச்சூழலைக் காப்பதிலும், உணவுச் சங்கிலி உடையாமல் இருக்கவும் தாவர உண்ணி, ஊன் உண்ணி என அனைத்து வகை விலங்குகளும் சரியான விகிதத்தில் இருப்பது அவசியமாகும்.

🔷இந்தியாவின் முக்கிய அடையாளமாக அறியப்படும் வங்கப் புலிகள் எண்ணிக்கை குறையாமல் இருக்க அவற்றின் உணவான தாவர உண்ணிகளின் இருப்பும் குறிப்பிட்ட அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு தாவர உண்ணிகளின் எண்ணிக்கையையும் இந்த ஆண்டு கணக்கெடுக்க இருப்பதாக அந்த மாநில வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷முக்கியமாக பல்வேறு வகை மான்கள், காட்டெருது, காண்டாமிருகம், யானை உள்ளிட்டவை கணக்கிடப்படவுள்ளன. 2019-20 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுந்தரவனத்தில் 95 புலிகள் இருந்தன. வரும் டிசம்பா்-ஜனவரியில் நடைபெறும் கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

🔷வனப் பகுதியில் விடியோ கருவிகள் வைத்து கண்காணிப்பதுடன், வேறு புதிய வகை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுந்தரவன தேசியப் பூங்காவில் மட்டுமின்றி பக்ஸா புலிகள் தேசியப் பூங்கா, ஜல்தாபாரா தேசியப் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சுற்றுச்சூழல்

உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மி.மீ. என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக தகவல்..!!

🔷உலகளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மில்லி மீட்டர் என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கீழ் இயங்கும் கோப்பர் நிக்கஸ் மரைன் சர்வீஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

🔷கடல்கள் வெப்பமயமாவதாலும், நிலப்பரப்பு உருகுவதும் கடல் மட்டம் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நூற்றாண்டின் எந்த நேரத்திலும் காணப்பட்டதை விட அதிகமாகும் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

🔷1979 முதல் 2020 வரை ஆர்க்டிக் பகுதியில் உருகிய பனி, ஜெர்மனி பரப்பை விட ஆறு மடங்கு அதிகம் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...