இந்தியா
மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது இந்தியாவின் ஐ.என்.எஸ். சக்தி கப்பல்..!
💠இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல் மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது.
💠இந்தியாவில் இருந்து மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்காக கடந்த 17 ஆம் தேதி திரிகோனமலை துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படையைச் சேர்ந்த ‘எஸ்.எல்.என்.எஸ். சக்தி’ கப்பல் கிளம்பியது.
💠இந்த சூழலில் இலங்கை கடற்படை சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, ஆக்சிஜனை அனுப்பி வைக்கும் பணியில் உதவும் விதமாக, இந்திய கடற்படை சார்பில் ‘ஐ.என்.எஸ் சக்தி’ என்ற கப்பல் மூலம் 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
💠விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய இந்த கப்பல், கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
இந்தியாவின் முதலாவது மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையிலான நெடுஞ்சாலை..!!
💠சூரிய சக்தி ஆற்றல் அடிப்படையிலான மின்சார வாகன மின்னூட்ட நிலையங்களின் கட்டமைப்போடு டெல்லி-சண்டிகர் நெடுஞ்சாலையானது இந்தியாவின் முதலாவது மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையிலான நெடுஞ்சாலையாக மாறியுள்ளது.
💠இந்த நிலையங்களின் கட்டமைப்பானது பாரத் கனரக மின்தொழிற்சாலை நிறுவனத்தினால் (BHEL) அமைக்கப்பட்டுள்ளது.
💠இது கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கலப்பு & மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் அவற்றைத் துரிதமான நடைமுறைக்குக் கொண்டு வருதல் (முதற் கட்டம்) என்ற திட்டத்தின் (FAME - I) கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
பாகிஸ்தானின் பாபத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை..!!
💠வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் பாபத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
💠வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாபத் ஆலம் ஆட்டமிழக்காமல் 124 ரன்களை எடுத்து உள்ளார்.
💠இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் இடது கை ஆட்டக்காரரான பாபத் ஆலம் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர் தனது 22 ஆவது இன்னிங்சில் 5 ஆவது சதம் அடித்து உள்ளார். இதனால், விரைவாக 5 சதங்கனை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் சாதனையை முறியடித்து உள்ளார்.
💠இதற்கு முன், யூனிஸ் தனது 28 ஆவது இன்னிங்சில் 5 ஆவது சதம் அடித்து இருந்தது சாதனையாக இருந்தது. அவருக்கு அடுத்து, சலீம் மாலிக் (29 ஆவது இன்னிங்ஸ்) உள்ளார்.
உலக வெல்டா்வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் - யோா்டெனிஸ் உகாஸ்..!!
💠பிலிப்பைன்ஸின் மேன்னி பாக்கியோவை வீழ்த்தி உலக வெல்டா்வெயிடன் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தாா் கியூபாவின் யோா்டெனிஸ் உகாஸ்.
💠அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் மேன்னி பாக்கியோ-உகாஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. 10 ஆவது சுற்றில் பாக்கியோ ஆதிக்கம் செலுத்தி, உகாஸை நாக் அவுட் செய்தாா். ஆனால் அதை சமாளித்த மீண்ட உகாஸ், 12 ஆவது சுற்றில் பாக்கியோவை நாக் அவுட் செய்தாா். இறுதியாக நடுவா்கள் ஒருமனதாக தீா்மானித்து உகாஸ் வெற்றி பெற்றதாக அறிவித்தனா்.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்..!!
💠கென்யாவில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷய்லி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
💠நைரோபியில் நடந்த போட்டியில் ஷய்லி சிங் இறுதி முறையில் 6 புள்ளி 59 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி வென்றார். சுவீடன் வீராங்கனை Maja Askag 6 புள்ளி 60 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.
💠வெறும் 1 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் ஷய்லி சிங் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். ஒட்டுமொத்த தொடரில் இந்திய அணி 3 ஆவது பதக்கத்தை கைப்பற்றியது.