தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 22.6.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தில் முதல் பெண் விமானி நியமனம்..!!

🔷ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமான ஓட்டியாக மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷24 வயதான மாவ்யா சுதன் இந்திய விமானப்படையின் 12 ஆவது பெண் விமானியாவார். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் விமானப் படையில் இணைந்து தனது சொந்த மாநிலத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளார்.

🔷விமானப்படை அகாடமியில் நடந்த விழாவில் மாவ்யாவுக்கு விமானப்படை தளபதி பதவுரியா பட்டத்தை வழங்கினார்.

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமனம்..!!

🔷டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.

🔷32-ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் யார்? என்பது குறிப்பிடப்படவில்லை.

🔷இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீரர் மன்பிரீத் சிங்கும், துணை கேப்டன்களாக பின்கள வீரர்கள் பிரேந்திர லக்ரா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.

🔷‘ஒலிம்பிக்கில் 3-ஆவது முறையாக பங்கேற்கும் வாய்ப்புடன், இந்த முறை கேப்டனாக களம் இறங்க இருப்பது பெருமையான தருணம்’ என்று மன்பிரீத் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தியா

ஜம்மு காஷ்மீா் - அரசுப் பணியில் சேருபவா்கள் கூடுதல் சுயவிவரங்கள் அளிக்க சட்டத் திருத்தம்..!!

🔷ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணியில் சேருபவா்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் செல்லிடப்பேசி எண், 15-வயது முதல் கல்வி பயின்ற விவரம் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தகவல்களை அளிப்பதை கட்டாயமாக்கி சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

🔷இதன்படி, அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவா் தனது குடும்ப விவரம், கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் செல்லிடப்பேசி எண், வாகன பதிவு எண், இ-மெயில், சமூக வலைதள முகவரி, வங்கி எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

🔷இந்த விவரங்கள் குறித்தும், விண்ணப்பித்த நபரைக் குறித்தும் சிஐடி போலீஸாா் ஒரு மாதத்தில் விசாரணை நடத்துவாா்கள். அப்போது இந்த விவரங்கள் தவறாக இருந்தால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

🔷மேலும், தோ்வுசெய்யப்படும் நபா் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தால் அல்லது குழந்தைகள், மனைவி வெளிநாட்டில் இருந்தாலும் அதுகுறித்தும் விளக்க வேண்டும் என புதிய சட்டத் திருத்தம் வலியுறுத்துகிறது.

மின்சார வாகனங்கள் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-குஜராத் அரசு அறிவிப்பு..!!

🔷பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களை வாங்குவோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

🔷மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான புதிய கொள்கையை குஜராத் அரசு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் 2 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கதொகை வழங்குவதற்காக 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

🔷பேட்டரியில் இயங்கும் இருசக்கரவாகனங்களுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயும், கார்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு 25 சதவீதம் வரை 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

மிசோரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை..!!

🔷மிசோரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே அறிவித்துள்ளார்.

🔷அவரது தொகுதியான ஐஸ்வால் பகுதியில் அதிக குழந்தைகளுடன் வசித்து வரும் பெற்றோருக்கு, ஊக்கத்தொகை மட்டுமின்றி சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🔷மிசோரத்தில் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வருவதால், மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...