தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.9.2021 (Daily Current Affairs)

இந்தியா

2021 உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 46 ஆவது இடம்..!!

🔷உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2021 இல் இந்தியா 46 ஆவது இடத்தில் உள்ளது.

🔷கடந்த ஆண்டு தரவரிசையில் இருந்து இந்தியா 2 இடங்கள் முன்னேறியுள்ளது. கீழ் நடுத்தர வருவாய் பிரிவின் கீழ், இந்தியா வியட்நாமிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

🔷உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை 2021 இல் 132 பொருளாதாரங்களின் கண்டுபிடிப்பானது சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்திறனையும் மற்றும் சமீபத்திய உலகளாவிய கண்டுபிடிப்பு போக்குகளைக் கண்காணிக்கிறது.

உலகம்

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான ஜப்பானிய இரட்டை சகோதரிகள்..!!

🔷ஜப்பானில் தேசிய விடுமுறையான முதியோர் தினத்தை முன்னிட்டு அங்கு 107 வயதை கடந்த இரட்டையர்கள் உமேனோ சுமியம்மா மற்றும் கவுமே கோடமா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

🔷ஜப்பானில் உள்ள 12.5 கோடி மக்கள்தொகையில் சுமார் 29 சதவீதம் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று அங்குள்ள சுகாதாரம் மற்றும் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 86,510 பேர் நூறு வயது நிரம்பியவர்கள் ஆவர். அவர்களில் பாதி பேர் இந்த ஆண்டு 100 வயதை கடந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🔷உமேனோ சுமியம்மா மற்றும் கவுமே கோடமா இரட்டை சகோதரிகள் நவம்பர் 5, 1913 இல் மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தனர். செப்டம்பர் 1 தேதியின் படி அவர்கள் (107 வயது 300 நாட்கள்) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் 108 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளனர்.

இந்தியா

உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில் தமிழகத்திற்கு மூன்றாவது இடம்..!!

🔷உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில் தமிழகத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

🔷பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது.

🔷அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2 ஆவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

🔷மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும், மேகாலயா இரண்டாவது இடத்திலும், மணிப்பூர் 3 ஆவது இடத்திலும் உள்ளது.

நியமனங்கள்

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக்ராம் சவுத்ரி நியமனம்..!!

🔷இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷விமானப்படைத் தளபதி ஆர்.எஸ். பதாரியா வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து விமானப் படையின் துணைத்தளபதியாகப் பணியாற்றிவரும் வி.ஆர். சவுத்ரி புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷39 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வரும் சவுத்ரி, ஏறத்தாழ 3 ஆயிரத்து 800 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் மிக்கவர்.


Share Tweet Send
0 Comments
Loading...