தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.8.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்..!

💠மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

💠தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்துள்ள இல.கணேசன், அக்கட்சியில் தேசிய அளவிலான பொறுப்புக்களிலும் இருந்தவர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார்.

💠இந்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசனைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

சுற்றுச்சூழல்

கிரீன்லாந்து பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக பெய்த கனமழை..!!

💠கிரீன்லாந்து பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது.

💠1950க்கு பிறகு, கடந்த 14 முதல் 16 ஆம் தேதி வரை மூன்று நாட்களில் மொத்தம் 7 பில்லியன் டன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

💠மழை மற்றும் அதிக வெப்பநிலை, தீவு முழுவதும் பரவலான பனி உருகலைத் தூண்டியுள்ளதாக மூத்த விஞ்ஞானி வால்ட் மேயர் கூறியுள்ளார்.

💠அதே வேளையில்,வெப்பமயமாதலினால் ஏற்கனவே அதிகரித்து வரும் விகிதத்தில், அங்கு பனிக்கட்டிகள் உருகி வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு

2 ஆவது அதிவேக சாதனை படைத்த ஜமைக்கா வீராங்கனை..!!

💠அமெரிக்காவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் Thompson-Herah 2 ஆவது அதிவேக சாதனையை படைத்துள்ளார்.

💠ஓரேகான் மாகாணத்தில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை Thompson-Herah பந்தய தூரத்தை 10 புள்ளி 54 விநாடிகளில் கடந்த 2 ஆவது அதிவேக சாதனையை படைத்தார்.

💠ஏற்கனவே Thompson-Herah டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர்.

ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர்..!!

💠ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக சிங்கப்பூர் தேசிய அணி வீரர் களமிறங்க உள்ளார்.

💠பெங்களூரு அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக இலங்கை வீரர்கள் Dushmantha Chameera மற்றும் Wanindu Hasaranga தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

💠சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் பெங்களூரு அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தியா

சிலிண்டா் முன்பதிவுக்கு ஊா்ஜா சேவை..!!

💠நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதல்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்தல், சிலிண்டா்களை விநியோகிக்கும் நிறுவனத்தை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக ‘ஊா்ஜா’ என்ற தகவல் பரிமாற்ற வசதியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

💠பாரத் பெட்ரோலியம் நிறுவன சிலிண்டா்களை முன்பதிவு செய்தல், அதன் விலை, எப்போது அது வாடிக்கையாளரிடம் வந்து சேரும், எந்தெந்த காலங்களில் சிலிண்டா்கள் வாங்கப்பட்டன போன்ற சேவைகளை வழங்க ‘ஊா்ஜா’ என்ற தகவல் பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

💠இந்த வசதி மூலம் சிலிண்டா்களை முன்பதிவு செய்வதற்கான தங்கள் செல்லிடப்பேசி எண்களை வாடிக்கையாளா்கள் மாற்றலாம். அத்துடன் சிலிண்டா் விநியோக நிறுவனங்களை மாற்றுதல், பாரத்கேஸ் விநியோகஸ்தா்கள் மூலம் பழுது பாா்க்கும் சேவைகள், இரண்டு சிலிண்டா் இணைப்புகள் கோருதல் ஆகிய சேவைகளையும் பெறலாம்.

💠இதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையை அறிந்துகொள்ளுதல், அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் குறித்த தகவல்களை பெறுதல், பெட்ரோல், டீசலை வீட்டுக்கே கொண்டு வந்து சோ்த்தல் ஆகிய சேவைகளும் இந்த வசதி மூலம் வழங்கப்படும்.

💠தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த வசதி தொடா்பான தகவல்களை பெற பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் வலைதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

💠நாடு முழுவதும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிலிண்டா்களை 8.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் பயன்படுத்துகின்றனா். அந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. நாட்டின் எரிபொருள் தேவையில் 30 சதவீதத்தை அந்த நிறுவனம் பூா்த்தி செய்து வருகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...