சாதனைகள்
Burpee தண்டால் முறையில் பிரேசில் வீரர் கின்னஸ் சாதனை..!!
🔷பிரேசிலை சேர்ந்த எம்.எம்.ஏ. விளையாட்டு வீரர் ஒருவர் burpee என்ற தண்டால் முறை விளையாட்டில் ஒரு மணி நேரத்தில் 951 முறை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
🔷மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏ விளையாட்டை சேர்ந்த பிரேசில் வீரர் Cassiano Rodrigues Laureano, burpee எனப்படும் தண்டால் வகை உடற்பயிற்சியை கடந்த 2 ஆண்டுகளாக பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அந்த விளையாட்டில் கின்னஸ் சாதனை படைக்க முயன்ற அவர் ஒரு மணி நேரத்தில் 951 முறை burpee-ஐ செய்து காட்டி சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
🔷தன் மருமகளுக்கு ஏற்பட்டு உள்ள இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்ட இப்போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிப்பு
மாமன்னர் அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்த நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு..!!
🔷எகிப்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிந்து போன நகரத்திலிருந்து போர்க் கப்பல் ஒன்று தற்போது கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
🔷நைல் நதியின் மேற்குக் கரைப் பகுதியில் மாமன்னர் அலெக்ஸாண்டரால் கி.மு. 331இல் அலெக்ஸாண்ட்ரியா என்ற நகரம் நிர்மாணிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் தெனிஸ் ஹெராக்லியன் என்ற நகரம் இருந்து வந்தது.
🔷மத்திய தரைக்கடல் பகுதியல் மிகப் பெரிய துறைமுகமாக இருந்த தீனிஸ்-ஹெராக்லியன் நகரம் பூகம்பம் மற்றும் ஆழிப் பேரலைகளால் அழிந்து போனதாகக் கருதப்படுகிறது.
🔷தற்போது இந்த நகரத்தின் எச்சங்களை கடலடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம்
5 ஆம் தலைமுறையைச் சேர்ந்த அதிநவீன போர் விமானம் தயாரித்துள்ளது ரஷ்யா..!!
🔷ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த அதி நவீன போர் விமானத்தை ரஷ்யா தயாரித்துள்ளது.
🔷செக்மேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானத்தை சுகோய் நிறுவனம் தயாரித்துள்ளது. எடைகுறைந்த ஒற்றை என்ஜின் கொண்ட செக்மேட் விமானம் தங்களது மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு என்றும் 7 டன் அளவிற்கு போர் கருவிகளை எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது என்றும் சுகோய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔷தலைநகர் மாஸ்கோ அருகே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செக்மேட் விமானத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பார்வையிட்டார். இந்த விமானத்தை 2026 ஆம் ஆண்டு முதல் கேட்கும் நாடுகளுக்கு விற்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
1000 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் அதிவேக ரயில் - சீனாவில் அறிமுகம்..!!
🔷உலகிலேயே அதி வேகமாகச் செல்லும் ரயிலை சொந்தமாகத் தயாரித்து சீனா அறிமுகம் செய்துள்ளது.
🔷மின்காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
🔷கடற்கரை நகரமான கிங்டாவ் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் உச்சபட்ச வேகத்தில் செல்லும் போது தண்டவாளத்தில் இருந்து மேலெழும்பி செல்லும் திறன் கொண்டது.
🔷தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் நகருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் மூலம் இரண்டரை மணி நேரத்தில் செல்ல முடியும். இதே தூரத்தை விமானத்தில் செல்ல 3 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
2032 இல் பிரிஸ்பேனில் நடக்கிறது ஒலிம்பிக் போட்டிகள்..!!
🔷வரும் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.
🔷ஆஸ்திரேலியாவில் கடைசியாக, கடந்த 2000 ஆம் ஆண்டு சிட்னி நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 1956 இல் மெல்போா்ன் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது.
🔷இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து பிரிஸ்பேன் நகரில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த அந்நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிசன், ‘ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தேவை என்பதை நாங்கள் அறிவோம்’ என்றாா்.
🔷டோக்கியோவைத் தொடா்ந்து பாரீஸில் 2024 ஆம் ஆண்டும், பின்னா் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028 ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.