தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 21.6.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

🔷43 வயதான லாரல் ஹப்பார்ட் பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்று நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

🔷சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எந்தவொரு திருநங்கை விளையாட்டு வீரரும் ஒரு பெண்ணாகப் போட்டியிடலாம் என்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டதை அடுத்து ஹப்பார்ட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி சாம்பியன் ஆனாா்.!!

🔷இறுதிச்சுற்றில் அவா் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை வென்றாா். இதன் மூலம் கடந்த 1985-க்குப் பிறகு குயின்ஸ் கிளப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற சீசனிலேயே சாம்பியன் ஆன முதல் வீரா் என்ற பெருமையை பெரெட்டினி பெற்றுள்ளாா். முன்னதாக அந்த ஆண்டில் ஜொ்மனியின் போரிஸ் பெக்கா் அவ்வாறு சாம்பியன் ஆகியிருந்தாா்.

தென்னாப்ரிக்கா வீரர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை..!!

🔷மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தெ.ஆப்பிக்காவின் கேசப் மகராஜ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.

🔷1960-ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்ரிக்கா வீரர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

🔷இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் தனது 5/36 என்ற கணக்கில் ஹாட்ரிக் எடுத்து தென்னாப்பிரிக்காவை இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

உலகம்

பாரீசில் வெற்றிகரமாக விண்ணில் பறந்த மின்சார பறக்கும் டாக்சி..!!

🔷ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Volocopter நிறுவனம் மின்சார ஏர் டாக்சியை வெற்றிகரமாக செலுத்தியது.

🔷Le Bourget விமான நிலையத்தில் இந்த பறக்கும் டாக்சி 3நிமிடங்கள் வானில் பறந்த பின்னர் தரை இறங்கியது. 30 கிலோ மீட்டர் வேகத்திலும், 500 மீட்டர் பரப்பளவிலும் இந்த சோதனை நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷பயணிகள் யாருமின்றி சோதனை நடைபெற்றதாக Volocopter நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மின்சார பறக்கும் டாக்சிகள் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கமெனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநாடுகள்

அர்ஜுன் முண்டா இரண்டாவது தேசிய அரிவாளணு மாநாட்டைத் மெய்நிகராக தொடங்கி வைத்தார்..!!

🔷மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா இரண்டாவது தேசிய அரிவாளணு மாநாட்டை தொடங்கி வைத்தார். 19 ஜூன் 2021 அன்று அனுசரிக்கப்படும் உலக அரிவாளணு தினத்தை குறிக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

🔷இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI), நோவார்ட்டிஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், பிரமல் அறக்கட்டளை, காஸ்க்டோ மற்றும் நாஸ்கோ ஆகியவற்றின் கூட்டமைப்புடன் இணைந்து மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🔷அரிவாளணு நோய் (SCD), மிகவும் பரவலான மரபுவழி இரத்த கோளாறு ஆகும். இந்தியாவில் பல பழங்குடி குழுக்களிடையே இந்த நோய் பரவலாக உள்ளது.

🔷இந்தியாவில் இந்த நோய்க்கு பல செலவு குறைந்த சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் இந்த நோய்க்கான பராமரிப்பு அணுகல் குறைவாக உள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...