தினசரி நடப்பு நிகழ்வுகள் 20.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 20.9.2021 (Daily Current Affairs)

விருதுகள்

புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது - எஸ்.வி. சரஸ்வதிக்கு குடியரசுத் தலைவா் வழங்கினாா்..!

🔷ராணுவ செவிலியா் சேவை (எம்என்எஸ்) துணைத் தலைமை இயக்குநா் பிரிகேடியா் எஸ்.வி.சரஸ்வதிக்கு 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தாா்.

🔷ராணுவ செவிலியா் சேவையில் மகத்தான பங்களிப்புக்காக அவருக்கு செவிலியா்களுக்கான மிக உயா்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவா், பிரிகேடியா் எஸ்.வி.சரஸ்வதிக்கு இந்த விருதை வழங்கினாா்.

நியமனங்கள்

பேஸ்புக் இந்தியா கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்..!!

🔷நிறுவனத்தின் பொது கொள்கை இயக்குநராக இருந்த அன்கி தாஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் அப்பதவியில் இருந்து விலகினாா். தற்போது ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், உபோ் நிறுவனத்தின் முன்னாள் பொது கொள்கை தலைவருமான ராஜீவ் அகா்வாலை ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் அப்பொறுப்புக்கு நியமித்துள்ளது.

🔷இந்தியப் பயனாளா்களின் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு, தனியுரிமை, இணையதள நிா்வாகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடா்பான கொள்கைகளை வகுப்பதில் ராஜீவ் அகா்வால் முக்கியப் பங்காற்றுவாா் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷ராஜீவ் அகா்வாலின் அனுபவம் ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, பொறுப்புணா்வு ஆகியவற்றை அதிகப்படுத்த உதவும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் மேலாண் இயக்குநருமான அஜித் மோகன் தெரிவித்துள்ளாா்.

இந்தியா

பஞ்சாபின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் சரண்ஜித் சிங்..!!

🔷பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

🔷சரண்ஜித் சிங்குடன் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுக்ஜிந்தர் ரந்தாவாவும் அமைச்சராக பதவி ஏற்றார்.

🔷பஞ்சாபின் முதலாவது தலித் முதலமைச்சரான சரண்ஜித் சிங் சன்னி, மாநிலத்தின் 16 ஆவது முதலமைச்சராவார்.

கட்லா வகை மீனை மாநில மீனாக அறிவித்தது சிக்கிம் அரசு..!!

🔷சிக்கிம் மாநிலத்தில் பாயும் தீஸ்தா மற்றும் ரங்கித் ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகளில் கட்லா வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன.

🔷காப்பர் மசீர் என்றும் அழைக்கப்படும் இந்த மீன்கள் அருகி வருவதாக, லக்னோவில் உள்ள ஐசிஏஆர்-தேசிய மீன் மரபணு வளங்கள் அமைப்பு (ஐசிஏஆர்-என்பிஎப்ஜிஆர்) கடந்த 1992 ஆம் ஆண்டு அறிவித்தது. பின்னர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமும் 2014 இல் இந்த மீன்களை அருகி வரும் இனங்கள் பட்டியலில் சேர்த்தது.

🔷எனவே, கட்லா மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை மாநில மீன் என அறிவித்துள்ளோம் என்று சிக்கிம் மாநில மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் சி.எஸ்.ராய் தெரிவித்தார். இந்த மீன்களை பொதுமக்கள் மிகவும் விரும்புவதுடன் இவற்றுக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரின் சிரராகோங் மிளகாய் மற்றும் டாமெங்லாங் ஆரஞ்சு ஆகியவை GI குறியீட்டை பெற்றது..!!

🔷மணிப்பூரின் இரண்டு புகழ்பெற்ற தயாரிப்புகளான ஹத்தேய் மிளகாய், மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் காணப்படுகிறது மற்றும் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர் பெற்றது, மற்றும் டேமெங்லாங் மாண்டரின் ஆரஞ்சுக்கு புவியியல் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.

🔷இது மணிப்பூர் வரலாற்றில் ஒரு வரலாற்று மைல்கல் மற்றும் இது மணிப்பூரில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்.

விளையாட்டு

பங்கஜ் அத்வானி 2021 ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றார்..!!

🔷2021 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி மீண்டும் கோப்பை வென்றார். இறுதி ஆட்டத்தில் ஈரானின் அமிர் சர்கோஷை வீழ்த்தினார்.

🔷கத்தார் தலைநகர் தோகாவில், ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தொடர்ந்து 2 ஆவது முறையாக (2019, 2021) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு இத்தொடர் நடத்தப்படவில்லை. இது தவிர இவர், இரண்டு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய முதல் தொடரில் கோப்பை வென்று அசத்தினார்.

🔷இது, ஆசிய அளவில் ஸ்னுாக்கர் (7), பில்லியர்ட்ஸ் (4) போட்டியில் பங்கஜ் அத்வானி கைப்பற்றிய 11 ஆவது பட்டமானது. இவர், ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கம் (2006, 2010) கைப்பற்றியுள்ளார்.

தேசிய ஓபன் தடகளம் - 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம்..!!

🔷தேசிய ஓபன் தடகள போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம் கிடைத்தது.

🔷60 ஆவது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர்.வித்யா 58.47 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

🔷அவர் ஏற்கனவே 400 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் சந்தோஷ்குமார் 50.79 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.


Share Tweet Send
0 Comments
Loading...