தினசரி நடப்பு நிகழ்வுகள் 20.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 20.6.2021 (Daily Current Affairs)

உலகம்

ஈரான் அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றி..!!

🔷ஈரானில் அதிபர் தேர்தல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

🔷ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் (Hassan Rouhani) பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர்.

🔷இதில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனினியின் ஆதரவாளராக செயல்பட்ட 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றிப்பெற்றார். 90 சதவீத வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ள நிலையில், அதில் 62 சதவீத வாக்குகளை ரைசி பெற்றுள்ளார்.

விருதுகள்

2021 ஆம் ஆண்டு லேண்ட் ஃபார் லைஃப் விருது..!!

🔷2021 ஆம் ஆண்டு லேண்ட் ஃபார் லைஃப் விருதானது இராஜஸ்தானின் ஃபெமிலியல் ஃபாரஸ்ட்ரி எனும் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

🔷குடும்ப வனவியல் (Familial Forestry) என்பது ஒரு மரத்தினைப் பசுமை மிக்க குடும்ப உறுப்பினராகக் கருதும் ஒரு முறையாகும்.

🔷ஐ.நா.வின் பாலைவனமாதலை எதிர்ப்பது மீதான மாநாடானது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருதினை வழங்குகிறது.

🔷நிலத்தினைச் சமநிலையில் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சிறந்த மற்றும் புதிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப் படுகிறது.

🔷இந்த ஆண்டிற்கான விருதின் கருத்துரு, “Health land, Healthy lives” என்பதாகும். இது நில வளங்காப்பு மற்றும் மீட்பு தொடர்பான உலகின் மிக உயரிய விருதாகக் கருதப் படுகிறது.

தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனத்துக்கு சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருது..!!

🔷தமிழ்நாடு செய்தித்தாள் காகிதநிறுவனம் 2020-ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுக்கான ‘தங்க மயில்’ (கோல்டன் பீக்காக்) விருதை வென்றுள்ளது. கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஐசிசிஎஸ்ஆர் கார்ப்பரேட் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்வில் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

🔷உலகளாவிய மற்றும் தேசியஅளவிளான எண்ணெய் உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காகிதம், சிமென்ட்,சுரங்கம் போன்ற துறைகளில் தனது வணிக முறையிலும், நடவடிக்கையிலும் நாணயம், வெளிப்படைத் தன்மை, ஒழுக்கத்தை நெறியோடு பின்பற்றுகிற நிறுவனங்களுக்கு டெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டைரக்டர்ஸ் என்றஅமைப்பால் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

🔷காகித நிறுவனத்தின் ஆலைகளை சுற்றியுள்ள அடித்தட்டு மக்கள், நலிந்த மாணவர்களுக்கு பல சமூகநலப் பணிகளை, தனதுவிரிவான நலத்திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

🔷திருச்சி மாவட்டத்தில் தனது ஆலைக்கு உட்பட்ட இடத்தில் புதிய பள்ளிக்கூடத்தை நிறுவி வருகிறது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் ஒன்றிணைந்து, 1.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான தோட்டங்களை மேம்படுத்தி வருகிறது.

மாநாடுகள்

டாக்டர் ஹர்ஷவர்தன் உலகளாவிய யோகா மாநாடு 2021 இல் உரையாற்றுகிறார்.

🔷உலகளாவிய யோகா மாநாடு 2021 இன் தொடக்க விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ்வர்தன் உரையாற்றினார்.

🔷இந்நிகழ்ச்சியை “மோக்சயதன் யோக்சன்ஸ்தான்” மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு மற்றும் இந்திய கலச்சார உறவுகள் கவுன்சில் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

🔷ஜீன் 21, 2021 இல் 7 ஆவது சர்வதேச யோக நாள் அனுசரிக்கப்படுகிறது.

விவாடெக் அமைப்பின் 5 ஆவது தொழில்நுட்ப மாநாடு..!!

🔷விவாடெக் அமைப்பின் 5 ஆவது தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

🔷ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு விவாடெக் என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2016 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

🔷5 ஆவது மாநாடு ஜீன் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

🔷இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜீன் 16இல் பிரதமர் மோடி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

🔷ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பர்க், மைக்ரோ சாஃப்ட் தலைவர் பிராட்ஸ்மித் உள்ளிட்ட தொழில்துறை தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா

குஜராத் கலோல் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

🔷குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள கலோல் ரயில் பாலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

🔷முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Share Tweet Send
0 Comments
Loading...