தினசரி நடப்பு நிகழ்வுகள் 2.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள்  2.8.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

K2 சிகரத்தில் ஏறிய இளம் வயது வீரர்..!

💠பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதான மலையேறும் வீரர் ஓருவர் K2 சிகரத்தினை ஏறிய உலகின் இளம் வயது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். K2 சிகரமானது உலகின் இரண்டாவது உயரமான சிகரமாகும்.

💠லாகூரைச் சேர்ந்த செஹ்ரோஷ் காசிப் என்பவர் ஒரு குடுவையில் நிரப்பப் பட்ட ஆக்சிஜனின் உதவியோடு 8611 மீட்டர் உயரம் கொண்ட அந்தச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

💠பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உலகின் 14 உயரிய சிகரங்கள் அமைந்துள்ளன, இவை 8000ers எனவும் அழைக்கப்படுகின்றன.

💠K2 மற்றும் நங்க பர்வதம் உள்ளிட்ட ஐந்து 8000 மீட்டர் உயர சிகரங்கள் பாகிஸ்தானில் அமைந்துள்ளன.

விருதுகள்

சிறந்த மேலாண்மைக்கான நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் விருது..!!

💠மத்தியப் பிரதேசத்தின் சாத்பூரா புலிகள் காப்பகமானது அதன் சிறப்பு வாய்ந்த மேலாண்மைக்காக புவிப் பாதுகாவலர் பிரிவில் நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் (NatWest Group Earth Heroes award) என்ற விருதினைப் பெற்றுள்ளது.

💠உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் (UNESCO) சத்புரா புலிகள் சரணாலயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

💠சாத்பூரா புலிகள் காப்பகமானது ஹோசங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நாட்டின் பழமையான ஒரு வளம் செறிந்த காடாகும்.

💠சாத்பூரா புலிகள் காப்பகமானது மத்திய இந்தியப் பகுதியின் சூழல் அமைப்பின் ஆன்மாவாக (soul of the eco-system of the central region of India) கருதப்படுகிறது.

மகாராஷ்டிரா பூசன் விருது 2021..!!

💠மகாராஷ்டிரா மாநில அரசின் உயரிய விருதான, “மகாராஷ்டிரா பூசன் விருது 2021” பிரபல பாடகியான “ஆஸா போஸ்லேவிற்கு” வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.

💠முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா பூஷன் தேர்வுக் குழு, ஆஸா போஸ்லேவை தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாடு

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் டிரிகா என்ற புதிய வகை துப்பாக்கி அறிமுகம்..!!

💠திருச்சி, துப்பாக்கி தொழிற்சாலையில் டிரிகா ரக துப்பாக்கியை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.

💠மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான, திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, போலீஸ் துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

💠திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில், 7.62x39மிமீ கார்பைன் திறன் கொண்ட டிரிகா என்ற புதிய ரக துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

💠துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி, புதிய ரக துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இந்த டிரிகா என்ற இலகுவான சிறிய ரக துப்பாக்கி, போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தும் வகையிலும், விமான நிலையங்கள் பாதுகாப்பு வீரர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

💠சக்தி வாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதமான இந்தத் துப்பாக்கியை, பாதுகாப்புப் வீரர்கள், கவச ஜாக்கெட்டுகள் மற்றும் உடைகளுக்குள் கூட மறைத்து பயன்படுத்தலாம்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால சிற்பத் தொகுப்பு - உத்தரமேரூர் பகுதியில் கண்டெடுப்பு..!!

💠காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

💠உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத் தொகுப்பை கண்டறிந்தனர்.

💠இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், “நாங்கள் கண்டெடுத்த இந்த சிற்பத் தொகுப்பானது ஒரே பலகைக்கல்லில் 1 1/2 அடி உயரம் 4 1/2 அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும். இவர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன்இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள்.

இந்தியா

2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்கழிவுகள் உற்பத்தி..!!

💠2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்கழிவு உற்பத்தியானது 31.6% அதிகமாக உள்ளது.

💠சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, இந்தத் தகவலை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

💠இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமானது மின்கழிவுகளாக கருதப்படக் கூடிய 21 வகையான மின் மற்றும் மின்னணு உபகரணங்களை அறிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...