தினசரி நடப்பு நிகழ்வுகள் 2.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2.7.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

400 மீ. தடை ஓட்டத்தில் உலக சாதனை முறியடிப்பு..!

🔷நாா்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளப் போட்டி ஆடவா் 400 மீ தடை ஓட்டத்தில் 46.70 விநாடிகளில் கடந்து 29 ஆண்டுக்கால உலக சாதனையை தகா்த்தாா் நடப்பு சாம்பியன் காா்ஸ்டன் வாா்ஹோம்.

🔷கடந்த 1992 பாா்சிலோனா ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் கெவின் யங் 46.78 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

இந்தியா

ஹரியானா மாநில விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்றால் 6 கோடி..!!

🔷ஹரியானா மாநில முதல்வர் ஶ்ரீமனோகர்லால் அம்மாநில விளையாட்டு வீரர்கள் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வெல்பவர்களுக்கு 6 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவருக்கு 4 கோடியும், வெண்கலபதக்கம் வெல்பவர்க்கு 2.50 கோடியும் வழங்கப்படும் என அறிவித்தார்.

எஸ்ஐசி தலைவரின் ஓய்வு வயது 62 ஆக நீட்டிப்பு..!!

🔷எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயதை 62ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் தலைவா்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது. எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயது 62ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

🔷இதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சட்டத் திருத்தத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை 2021-22ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் வெளியிட்டு ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படும் என்றும் நிகழாண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்திருந்தாா்.

🔷இதற்கு ஏதுவாக, தற்போது எல்ஐசி தலைவராக உள்ள எம்.ஆா்.குமாரின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு மாா்ச் 13ஆம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...