இந்தியா
என்ஹெச்ஆர்சி தலைவராக அருண் மிஸ்ரா பொறுப்பேற்பு..!!
🔷தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார்.
🔷முன்னதாக, அந்தப் பொறுப்பில் இருந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. இந்நிலையில், சுமார் 5 மாதங்கள் காலியாக இருந்த அந்தப் பதவிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவரோடு, ஆணைய உறுப்பினர் ஒருவரும் பொறுப்பேற்றதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறின.
🔷உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2014 ஜூலையில் பொறுப்பேற்ற அருண் மிஸ்ரா, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்தப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.
திட்டங்கள்
நரேந்திர சிங் தோமர் தோட்டக்கலை கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கினார்..!!
🔷தோட்டக்கலை வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தோட்டக்கலை கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தை (CDP) தொடங்கினார்.
🔷வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சின் தேசிய தோட்டக்கலை வாரியம் (NHB) செயல்படுத்திய மத்திய துறை திட்டம், CDP அடையாளம் காணப்பட்ட தோட்டக்கலை கிளஸ்டர்களை உலகளவில் போட்டிக்கு உட்படுத்துவதற்காக வளர்த்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நியமனங்கள்
ஓய்வு பெற்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் IBF தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்..!!
🔷முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி விக்ரம்ஜித் சென் புதிதாக அமைக்கப்பட்ட சுய ஒழுங்குமுறை அமைப்பான டிஜிட்டல் மீடியா உள்ளடக்க ஒழுங்குமுறை கவுன்சிலின் (DMCRC) தலைவராக நியமிக்கப்பட்டதாக இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை (IBF) அறிவித்தது.
🔷தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள் 2021 இன் கட்டளைப்படி DMCRC உருவாக்கப்படுகிறது.
🔷ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஓட்ட (மேலதிகமாக) தளங்களை ஒன்றிணைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இஸ்ரேல் புதிய அதிபராக ஐசக் ஹெர்ஸாக் தேர்வு..!!
🔷இஸ்ரேலின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
🔷இஸ்ரேலின் 10-ஆவது அதிபராக கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் பொறுப்பு வகித்து வரும் ரூவன் ரிவ்லினின் பதவிக் காலம் அடுத்த மாதம் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
🔷ரகசியமாக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், ஐசக் ஹெர்ஸாக் வெற்றி பெற்றார். 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, 11-ஆவது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🔷60 வயதாகும் ஐசக் ஹெர்ஸாக், முன்னாள் அதிபர் சாயிம் ஹெர்ஸாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983 முதல் 1993-ஆம் ஆண்டு வரை அவர் இஸ்ரேலின் அதிபராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
🔷புதிய அதிபராகத் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐசக் ஹெர்ஸாக் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை வீட்டு வசதி, சுற்றுலா, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
🔷இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து, புதிய பிரதமரின் தலைமையில் அரசு அமையவிருக்கும் பரபரப்பான சூழலில் ஐசக் ஹெர்ஸாக் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.