தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.9.2021 (Daily Current Affairs)

விருதுகள்

முனைவர் கா.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

🔷தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, முனைவர் கா.செல்லப்பனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்த்தமைக்காக செல்லப்பனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கா.செல்லப்பன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

🔷கா.செல்லப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1936 ஆம் ஆண்டு பிறந்த செல்லப்பன், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

🔷சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள, கா.செல்லப்பனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாதனைகள்

ஈஃபில் கோபுரத்தில் இருந்து கயிற்றின் மீது நடந்து இளைஞர் சாதனை..!!

🔷பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்திலிருந்து மறுபுறம் உள்ள கட்டடம் வரை கயிற்றின் மேல் நடந்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

🔷நாதன் பவுலின் என்று அழைக்கப்படும் அந்த இளைஞர் ஈஃபில் கோபுரத்திலிருந்து சுமார் 600 மீட்டருக்கு அப்பால் உள்ள சாய்லாட் என்ற திரையரங்கு வரை 70 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது அசாத்தியமாக நடந்து சென்றார்.

🔷நாதன் பவுலின் இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக அவரே கடந்த 2017 ஆம் ஆண்டு இதேபோல் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

கார்பன்டை ஆக்சைடைச் சேகரிக்கும் இந்தியாவின் முதல் ஆலை..!!

🔷டாடா ஸ்டீல் நிறுவனமானது இந்தியாவில் முதலாவது கார்பன் டை ஆக்சைடு சேகரிப்பு ஆலையினை தொடங்கி உள்ளது.

🔷இது ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலைகளின் ஊது உலை வாயுவிலிருந்து கார்பன் டை ஆக்சைடை நேரடியாக பிரித்தெடுக்கிறது.

🔷இந்தச் சாதனையின் மூலம், இத்தகைய கார்பன் சேகரிப்புத் தொழில்நுட்பத்தினை நிறுவிய நாட்டின் முதல் எஃகு ஆலையாக டாடா ஸ்டீல் மாறியுள்ளது.

🔷இந்த ஆலையானது ஒரு நாளைக்கு 5 டன் அளவிலான கார்பன்படை ஆக்சைடை சேகரிக்க வல்லது.

🔷இந்த ஆலையானது மலிவு விலையிலான கார்பன் சேகரிப்புத் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணியில் உள்ள கார்பன் கிளீன் என்ற அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

விளையாட்டு

ஆசிய வாலிபால் - இந்தியா 9 ஆம் இடம்..!!

🔷ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 9 ஆவது இடத்தை பிடித்து நிறைவு செய்தது.

🔷முதலிடத்துக்கான ஆட்டத்தில் ஈரான் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 3 ஆவது இடத்துக்கான மோதலில் சீனா சீன தைபேவை தோற்கடித்தது.

🔷5 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கத்தாா் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பாகிஸ்தான் தென் கொரியாவை வீழ்த்தி 7 ஆம் இடம் பிடித்தது.

🔷11 ஆவது இடத்துக்கான மோதலில் கஜகஸ்தான் சவூதி அரேபியாவை வென்றது. உஸ்பெகிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்தி 13 ஆம் இடம் பிடித்தது. தாய்லாந்து குவைத்தை வீழ்த்தி 15 ஆம் இடம் பிடித்தது.


Share Tweet Send
0 Comments
Loading...