தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.6.2021 (Daily Current Affairs)

உலகம்

ஜெர்மனியில் 350 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு..!!

🔷தென்கிழக்குப் பகுதியில் உள்ள கலோன் என்ற நகரத்தில் 64 வயதான முதியவர் ஒருவர் சாலையில் சென்ற போது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் அழகிய ஓவியம் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

🔷இதையடுத்து போலீசார் ஓவியத்தைக் கைப்பற்றிப் பார்த்தபோது 17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டது தெரியவந்தது. 1665 ஆம் ஆண்டு வாழ்ந்த ஓவியர் பியட்ரோ பெல்லோட்டி என்பவர் தன்னைத் தானே வரைந்த ஓவியம் அது.

🔷ஓவியத்தின் பின்புறம் அந்த ஓவியரின் பெயர் மற்றும் ஆண்டு குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த ஓவியத்தை குப்பைத் தொட்டியில் வீசியவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தோ்வு..!!

🔷ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அந்தப் பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பாா்.

🔷இதுகுறித்து 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் வோல்கான் போஸ்கிா் தெரிவித்துள்ளதாவது, ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, 2026-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றாா் அவா்.

🔷அதனைத் தொடா்ந்து, ஐ.நா பொதுச் சபை அரங்கில் குட்டெரெஸுக்கு போஸ்கிா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ரஷ்யா ஈரானுக்கு ஒரு புதிய உளவு செயற்கைக்கோளான ‘கனோபஸ்-V’ ஐ வழங்குகிறது.

🔷ரஷ்யா ஈரானுக்கு ஒரு மேம்பட்ட செயற்கைக்கோள் அமைப்பான ‘கனோபஸ்-V’ ஐ வழங்க உள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களை கண்காணிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உளவு செயற்கைக்கோள் ஆகும்.

🔷கனோபஸ்-V, கடந்த ஆண்டு கார்டோசாட்-2Fக்கு மிக நெருக்கமாக வந்தது. இரண்டும் கீழ் பூமி சுற்றுப்பாதையில் நகரும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களாகும். ஆனால் அவை ஒன்றுகொன்று மோதவில்லை.

இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் அகில இந்திய உயர்கல்வி அறிக்கை (AISHE) 2019-20ஐ வெளியிட்டார்.

🔷உயர் கல்விக்கு அரசு தொடர்ந்து அளித்து வரும் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது. இது 2019-20இன் காரணிகளை 2015-16உடன் ஒப்பிடுகிறது.

🔷உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 4% அதிகரித்துள்ளது. மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER), உயர் கல்வியில் சேர்ந்த தகுதியுள்ள வயதினைச் சேர்ந்த மாணவர்களின் சதவீதம் 2019-20ஆம் ஆண்டில் 1% ஆகும். சிக்கிம் 75.8% உடன் GERஇல் முதலிடத்திலும், சண்டிகர் 52.1% உடன் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 51.4% உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

🔷உயர்கல்வியில் மாணவர் ஆசிரியர் விகிதம் 26 ஆகும். மொத்த ஆசிரியர்களில் 5% ஆண்களும், 42.5% பெண்களும் உள்ளனர்.

🔷கடந்த ஐந்து ஆண்டுகளில் முனைவர் படிப்புகளின் எண்ணிக்கை 60% அதிகரித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 75இல் இருந்து, 2020இல் 135ஆக அதிகரித்துள்ளது.

🔷மாணவர் சேர்க்கை 2015-16 முதல் 2019-20 வரை 4% அதிகரிக்கித்துள்ளது. 2015-16ஆம் ஆண்டு முதல் 2019-20ஆம் ஆண்டு வரை உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை2% அதிகரித்துள்ளது.

விளையாட்டு

ஹண்டிரட் பெண்கள் போட்டியில் ஐந்து இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்..!!

🔷ஷஃபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மாஆகிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள், ஹண்டிரட் பெண்கள் போட்டியில் இணைந்துள்ளனர்.

🔷இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஹண்டிரட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இது 100 பந்துகளுக்கு விளையாடப்படுகிறது. இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகள் வெவ்வேறு அணிகளுக்காக போட்டியிடுவார்கள்.


Share Tweet Send
0 Comments
Loading...