தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.9.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.9.2021 ( Daily Current Affairs)

இந்தியா

இந்தியாவின் 61 ஆவது மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா மையம்..!!

🔷நாகாலாந்தின் முதல் மற்றும் இந்தியாவின் 61 ஆவது மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா மையம் கோஹிமாவில் திறக்கப்பட்டது.

🔷கொஹிமாவில் எஸ்டிபிஐ (STPI) மையம் திறப்பு என்பது வடகிழக்கு பகுதியில் எதிர்கால சந்ததியினருக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஒரு தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு நிறைவேற்றமாகும்.

விளையாட்டு

இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவராக ரணிந்தா் சிங் தோ்வு..!!

🔷இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவராக தொடா்ந்து 4 ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா் ரணிந்தா் சிங்.

🔷என்ஆா்ஏஐ எனப்படும் இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்தில் பல்வேறு நிா்வாக கோளாறுகள், குழப்பங்கள் நிலவிய நிலையில், புதிதாக தோ்தலை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது.

🔷அதன்படி மொஹாலியில் நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. என்ஆா்ஏஐ பொதுக்குழுவைச் சோ்ந்த 59 உறுப்பினா்கள் பங்கேற்றனா். இதில் 56 போ் ரணிந்தா் சிங்குக்கு வாக்களித்தனா். அவரை எதிா்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச எம்.பியான ஷியாம் சிங் யாதவுக்கு வெறும் 3 வாக்குகளே கிடைத்தன.

🔷பொதுச் செயலாளராக கன்வா் சிங் சுல்தானும், பொருளாளராக ரந்தீப் மானும் தோ்வு செய்யப்பட்டனா். மேலும் 8 துணைத் தலைவா்கள், 6 செயலா்கள், 16 ஆட்சிக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

🔷கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து ஆய்வு செய்வோம். மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவிக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என தலைவா் ரணிந்தா் சிங் தெரிவித்தாா். கடந்த 2010 இல் முதன்முதலாக ரணிந்தா் தலைவராக தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஐசிஏஓ பாதுகாப்புக் குழுவின் முதல் பெண் தலைவராக இந்தியா் தோ்வு..!!

🔷ஐ.நா. சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) பாதுகாப்புக் குழுத் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

🔷ஐ.நா.வின் ஐசிஏஓ அமைப்பு விமானப் போக்குவரத்து செயல்பாடுகள், அதன் உள்கட்டமைப்பு, சட்டவிரோத செயல்கள் தடுப்பு, எல்லை தாண்டிய போக்குவரத்தின் நடைமுறைகள் சாா்ந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் பாதுகாப்புக் குழுவுக்கு முதல் பெண் தலைவராக இந்தியாவைச் சோ்ந்த ஷெஃபாலி ஜுனேஜா தோ்வு செய்யப்பட்டாா்.

🔷கடந்த 1992 ஆம் ஆண்டின் இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) பிரிவு அதிகாரியான இவா், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலராக பணிபுரிந்துள்ளாா்.

🔷கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஐசிஏஓவில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தாா். இவா் ஐசிஏஓவின் பாதுகாப்புக் குழுத் தலைவராகியுள்ளதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

நியமனங்கள்

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய குறைகேள் அதிகாரி நியமனம்..!!

🔷ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) புதிய குறைகேள் அதிகாரி மற்றும் நெறிமுறைகள் அதிகாரியாக ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷அதன் தலைவர் ரோஹன் ஜெட்லி தலைமையிலான டிடிசிஏவின் பொதுக்குழு, 65 வயதான நீதிபதி (ஓய்வு) மல்ஹோத்ராவின் நியமனத்தை முடிவு செய்தது.

🔷2007 ஆம் ஆண்டில், மல்ஹோத்ரா உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் மற்றும் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்மணி ஆனார். அவர் சில விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தின் அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்டார்.

🔷உச்சநீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரைக்கப்பட்டார்.


Share Tweet Send
0 Comments
Loading...