தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள்  18.8.2021 (Daily Current Affairs)

தரவரிசை

உலகின் 100 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர்..!

💠உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் டி-மார்ட் உரிமையாளர் ராதாகிஷன் தாமனி இணைந்துள்ளார்.

💠மும்பையை தலைமையிடமான கொண்டு செயல்படும் டி-மார்ட் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

💠2002 ஆம் ஆண்டு ஆரமிக்கப்பட்ட டி-மார்ட் மூலம் நாடு முழுவதும் ஏராளமான சில்லறை வணிகம் நடைபெற்று வருகிறது.

💠இதனை உரிமையாளரான ராதாகிஷன் தாமனியின் சொத்து மதிப்பு தற்போது 1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் அவர் இணைந்துள்ளார்.

💠உலகின் முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் அவர் 98 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப்போன்று முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, அஸிம் பிரேம்ஜி, சிவ நாடார், மற்றும் லட்சுமி மிட்டல் ஆகியோரும் உலகின் 100 பணக்காரர்கள் வரிசையில் உள்ளனர்.

வர்த்தகம்

எச்டிஎஃப்சி வங்கி புதிய கிரெடிட் காா்டுகளை வழங்க ரிசா்வ் வங்கி அனுமதி..!!

💠புதிய கிரெடிட் காா்டுகளை வழங்க விதித்திருந்த கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விலக்கிக் கொண்டுள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

💠எச்டிஎஃப்சி வங்கி புதிய கிரெடிட் காா்டுகளை விநியோகிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசா்வ் வங்கி விலக்கிக் கொண்டுள்ளது.

💠2021 ஆகஸ்ட் 17 ஆம் தேதி ரிசா்வ் வங்கி எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா

இந்தியாவில் முதல்முறையாக வியட்நாம் துணைத் தூதரகம்..!!

💠இந்தியாவில் முதல்முறையாக வியட்நாம் துணைத் தூதரகம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.

💠பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள வியத்நாம் துணைத் தூதரகத்தின் கௌவுரவ துணைத் தூதராக என்.எஸ்.சீனிவாஸ் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை மேம்படுத்துவதற்காகவே துணைத் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

💠வியட்நாமின் 80 சதவீத மக்கள் பெüத்த மதத்தை பின்பற்றி வருவதால், இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது.

💠வியட்நாமின் 26 ஆவது முதலீட்டு பங்குதாரராக இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் முதலீட்டு உறவை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

💠மருந்து, ஆட்டோமொபைல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய வியட்நாம் சிறந்த நாடாகும். அந்நாட்டில் முதலீடு செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் பெங்களூரில் உள்ளன என்றார்.

விளையாட்டு

கென்யாவில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்..!!

💠கென்யா தலைநகர் நைரோபியில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

💠கலப்பு 400 மீட்டர் ரிலேவில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெண்கலம் வென்றனர். இந்திய குழுவினர் பரத், பிரியா மோகன், சுமி, கபில் ஆகியோர் பந்தய தூரத்தை 3 புள்ளி 20 நிமிடங்களில் கடந்து வெண்கலம் வென்றனர்.

💠தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை முறையே நைஜீரியா மற்றும் போலந்து நாடுகள் கைப்பற்றின. ஒட்டுமொத்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 5 ஆவது பதக்கம் இதுவாகும்.

ரஷ்யாவில் நடந்து வரும் உலக இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்..!!

💠ரஷ்யாவில் நடந்து வரும் உலக இளையோர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 1 வெள்ளி உள்பட 4 பதக்கங்கள் கிடைத்தன.

💠Ufa நகரில் நடந்த 61 கிலோ எடைப் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ரவீந்தர் குமார், ஈரான் வீரரிடம் 9-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளி வென்றார்.

💠அதேபோல் இந்திய வீரர்கள் யாஷ், பிருத்விராஜ் பாட்டீல், அனிரூத் குமார் ஆகியோர் முறையே 74, 92, மற்றும் 125 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றனர். மகளிர் தரப்பில் இந்திய வீராங்கனை பிபாஷா 76 கிலோ எடைப் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.


Share Tweet Send
0 Comments
Loading...