தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 18.7.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே சாதனைகளைப் படைத்த இளம் வீரர் இஷான் கிஷன்..!

🔷இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சில சாதனைகளை 23 வயது இஷான் கிஷன் நிகழ்த்தியுள்ளார்.

🔷முதல் ஒருநாள், டி20 ஆட்டங்களில் அரை சதங்களை எடுத்த 2 ஆவது வீரர்.

🔷33 பந்துகளில் அரை சதம் எடுத்து அறிமுக ஆட்டத்திலேயே விரைவாக அரை சதம் எடுத்த 2 ஆவது வீரர். இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் 26 பந்துகளில் அரை சதம் எடுத்த கிருனால் பாண்டியாவின் சாதனை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

🔷59 ரன்களுடன் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்.

🔷2001-க்குப் பிறகு அறிமுக ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர்.

விளையாட்டு

உலகக் கோப்பை செஸ் - இந்திய சிறுவன் பிரக்னானந்தா சாதனை..!!

🔷ரஷ்ய நாட்டில் நடைபெறும் செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய சிறுவன் பிரக்னானந்தா சாதனை புரிந்துள்ளார்.

🔷ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை எஃப் ஐ டி இ உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சாரில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 15 வயதான சிறுவன் பிரக்னானந்தாவும் ஒருவர் ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இந்த போட்டியில் 2 ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனிய நாட்டை சேர்ந்த காப்ரியல் சர்கிசியன் கலந்து கொண்டார். தற்போது 37 வயதாகும் இவர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஆவார். இவருடன் தமிழக சிறுவனான 15 வயதாகும் பிரக்னானந்தா போட்டியிட்டர்.

🔷இந்த போட்டியில் பிரக்னானந்தா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களில் 5ஆவது சிறுவன் என்னும் சாதனையையும் இவர் படைத்துள்ளார். இவர் 7 வயதில் இருந்தே பல செஸ் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.

மாநாடுகள்

மத்திய -தெற்காசிய 2021 மாநாடு..!!

🔷“மத்திய-தெற்காசிய 2021 மாநாடு” உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்றது.

🔷இதில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோர் கலந்துகொண்டனர் .

🔷இதில் ஜெய்சங்கர் “நாடுகளுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்க்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒருவழி பாதை போல் இல்லாமல் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியா

விவசாயிகள் விரும்பிய மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவல்களை பெற கிசன்சாரதி டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது..!!

🔷விவசாயிகள் விரும்பிய மொழியில் ‘சரியான நேரத்தில் சரியான தகவல்களை’ பெற வசதியாக, ‘கிசன்சாரதி’ என்ற டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

🔷விவசாயிகள் விரும்பிய மொழியில் ‘சரியான நேரத்தில் சரியான தகவல்களை’ பெற வசதியாக, ‘கிசன்சாரதி’ என்ற டிஜிட்டல் தளம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஶ்ரீ நரேந்திர சிங் தோமர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஶ்ரீ அஸ்வினிவைஷ்ணா ஆகியோருடன் இணைந்து தொடங்கப்பட்டது.

🔷டிஜிட்டல் இயங்குதளம் கிசான் சரதி விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பிய மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது

🔷விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகள் குறித்த தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை விஞ்ஞானிகளிடமிருந்து நேரடியாக டிஜிட்டல் தளத்தின் மூலம் பெறலாம்.

மகாராஷ்டிரா மாநில அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிமுகம்..!!

🔷மகாராஷ்டிரா மாநில அரசு புதிய மின்சார வாகன கொள்கை-2021 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே அறிவித்த கொள்கை, நாட்டில் பேட்டரி மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

🔷மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய EV கொள்கை 2018 கொள்கையின் திருத்தமாகும். மகாராஷ்டிராவை “இந்தியாவில் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில்” முதலிடம் வகிக்கும் நோக்கத்துடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...