தினசரி நடப்பு நிகழ்வுகள் 17.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 17.7.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

சென்னை காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள்..!

🔷சென்னை காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 591 காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

🔷இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகள் எந்தவித துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படாமல் பணிபுரிந்த காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

🔷இந்த நிலையில், எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 591 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அப்போது காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

🔷பதக்கங்களை வழங்கி கவுரவித்த பின்னர் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பதக்கங்களை பெற்றுவிட்டோம் என பெருமிதத்தோடு இல்லாமல், மக்களுக்கான பணியில் உத்வேகத்தோடு இயங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

திட்டங்கள்

மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகளுக்காக Mobile System என்ற புதிய திட்டம்..!!

🔷“Mobile System’ என்ற புதிய திட்டம் மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

🔷மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகள் , கல்வி கற்காமல் இடைநிற்கும் மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு தொடங்கி உள்ளது .

🔷தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தார்.

நியமனங்கள்

என்டிஏ மாநிலங்களவை தலைவராக அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்..!!

🔷தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) மாநிலங்களவைத் தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ-வின் மாநிலங்களவைத் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த தாவர் சந்த் கெலாட் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மூத்த அமைச்சர்கள் சிலர் பதவி விலகியபோது, கெலாட்டும் பதவி விலகினார். இதையடுத்து அவர் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

🔷இந்நிலையில் அவரது பதவிக்கு அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் தற்போது என்டிஏ-வின் மாநிலங்களவை துணைத் தலைவராக உள்ளார். மேலும் கடந்த 2010 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மத்திய அரசில் வர்த்தகம், தொழில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக பியூஷ் கோயல் உள்ளார்.

பொருளாதாரம்

பருத்திக்கு இறக்குமதி வரிவிதிப்பு..!!

🔷இந்திய ஜவுளித் தொழில் பருத்தியை அடிப்படையாகக் கொண்டது நாட்டின் 80 சதவீத ஜவுளி ஏற்றுமதிக்கு மூல ஆதாரமாக இருப்பது பருத்தி.

🔷உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் மிக நீண்ட இழைரக பருத்தி கிடைக்காதது. அதிகமாசுடைய பருத்தி கிடைப்பது போன்றவை இந்திய ஜவுளித்தொழிலுக்கு மிகவும் சவாவாக, உள்ளன.

🔷இந்தநிலையில் மத்திய அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீதம் இறக்குமதி வரி, 5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...