உலகம்
போஸ்வானா பகுதியில் உலகிலேயே மூன்றாவது பெரிய வைரக்கல் கண்டறியப்பட்டுள்ளது.
🔷உலகில் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவும் ஒன்று. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2017ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.
🔷இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் 3ஆவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போட்ஸ்வானா பகுதியில் உள்ள சுரங்கத்திலிருந்து வைரக் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மூன்றாவது பெரிய வைரக்கல் ஆகும்.
🔷வைரத்தை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்
மைக்ரோசாஃப்ட் தலைவராகசத்யா நாதெள்ளா நியமனம்..!!
🔷உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்டின் தலைமை செயலதிகாரி சத்யா நாதெள்ளா, அந்த நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
🔷மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவராக சத்யா நாதெள்ளாவை நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒருமனதாகத் தோ்ந்தெடுத்துள்ளது. மேலும், தலைமை இயக்குநராக ஜான் டபிள்யூ தாம்ஸனை இயக்குநா் குழு நியமித்துள்ளது.
🔷புதிய பொறுப்பை ஏற்கும் சத்யா நாதெள்ளா, இயக்குநா் குழுவின் இலக்குகளை நிா்ணயிக்கும் பணிக்கு தலைமை வகிப்பாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறுபான்மையின நலத்துறைச் செயலராக ரேணுகா குமாா் நியமனம்..!!
🔷உத்தர பிரதேசத்தின் 1987-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ரேணுகா குமாா், தற்போது மாநிலப் பணியில் பணியாற்றி வருகிறாா். தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தின் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.தேவ் வா்மன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔷நிா்வாக சீா்திருத்தங்கள்-மக்கள் குறைதீா் துறை, ஓய்வூதியம்-ஓய்வூதியா்கள் நலன் துறை ஆகியவற்றின் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் குமாா் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். 1987-ஆம் ஆண்டு மத்திய பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் சிறப்பு செயலராகத் தற்போது பணியாற்றி வருகிறாா்.
🔷மத்திய மகளிா்-சிறாா் நலத் துறையின் செயலராக இந்தீவா் பாண்டே (1988-ஆம் ஆண்டு மேற்கு வங்க பிரிவு ஐஏஎஸ் அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் ராணுவத்தினா் நலத் துறைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியா
இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க தேசிய உதவி எண் அறிவிப்பு..!!
🔷இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
🔷இதை உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயக்கி வருகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த உதவி எண் செயல்படுகிறது.
🔷தற்போது, 7 மாநிலங்கள் இதை அமல்படுத்தி வருகின்றன என்றும் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடி சாதனை படைத்த ஷஃபாலி வர்மா..!!
🔷இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் 96 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் இளம் வீராங்கனை ஷாஃபாலி வர்மா.
🔷இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது. ஷஃபாலி வா்மா 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 96 ரன்கள் விளாசி நூலிழையில் சதத்தை தவறவிட்டாா்.
🔷இந்திய மகளிர் அணியில் முதல் டெஸ்டில் இதற்கு முன்னர் 1995-இல் சந்தர்கந்தா கெளல் 75 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்தச் சாதனையை முறியடித்து முதல் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷஃபாலி வர்மா.