இந்தியா
புதிய N5 டாக்ஸிவே எனப்படும் சிறியரக விமான சேவை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தொடக்கம்..!
💠ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், புதியதாக N5 டாக்ஸிவே எனப்படும் சிறியரக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
💠டாக்ஸி டிராக்கை இணைப்பதன் மூலம், விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும் என விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
💠கொரோனாவிற்கு பிறகு விமான சேவைகள் மெல்ல அதிகரிக்க தொடங்கி இருப்பதால், டாக்ஸிவே இயக்குவது விமான சேவைகளை மீட்டெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் 10 நிறுவனங்கள் ட்ரோனைப் பயன்படுத்த அனுமதி..!!
💠நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் குறிப்பிட்ட 10 நிறுவனங்கள் நிபந்தனையின் அடிப்படையில் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. ஆளில்லா விமான முறை (யுஏஎஸ்) விதிகள், 2021 இல் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
💠சென்னையில் உள்ள டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், பயிர்களின் வளத்தை மதிப்பிடுவதற்கும், பயிர்களுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் ட்ரோனைப் பயன்படுத்தி திரவங்களைத் தெளிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
💠இதேபோல, கர்நாடக அரசுக்கும், மும்பை, மேற்கு வங்கத்தின் பர்ன்பூர், ஐதராபாத், அகமதாபாத், மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
💠அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அல்லது மாற்று ஆணை பிறப்பிக்கப்படும் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும்.
ஹைட்ரஜன் திட்டம்..!!
💠எரிசக்தித் துறையில் 2047 ஆம் ஆண்டுக்குள் (சுதந்திர நூற்றாண்டு) தற்சாா்பு அடைவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
💠அதை அடையும் நோக்கில், மாசுபாட்டை ஏற்படுத்தாத ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
💠தேசிய ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரித்து, அதை மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநாடுகள்
IBSA நாடுகளின் சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு..!!
💠இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் சுற்றுலாத் துறை அமைச்சர்களின் சந்திப்பினை இந்தியா காணொலி வாயிலாக நடத்தியது.
💠இந்திய சுற்றுலாத் துறையின் அமைச்சர் G. கிசன் ரெட்டி இச்சந்திப்பிற்குத் தலைமை ஏற்றார்.
💠உறுப்பினர் நாடுகளிடையே சுற்றுலா சார்ந்த ஒத்துழைப்பினை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு தளமாக இது அமையும்.
சட்டம் / மசோதா
அசாம் கால்நடைப் பாதுகாப்பு மசோதா - 2021..!!
💠2021 ஆம் ஆண்டு கால்நடைப் பாதுகாப்பு மசோதாவானது அசாம் மாநில சட்ட சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
💠இது கால்நடைகளை வெட்டுதல், இறைச்சியினை உட்கொள்ளுதல் மற்றும் அவற்றை இடம் மாற்றுதல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த விழைகிறது.
💠இந்த மசோதாவானது ஒரு குறிப்பிட்ட பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை நல அலுவலரிடமிருந்து அவசிய சான்றிதழைப் பெறாமல் ஒருவர் கால்நடையினை வெட்டுவதைத் தடை செய்கிறது.
💠‘கால்நடை’ எனும் சொற்கூறில் எருதுகள், காளைகள், பசுக்கள், கிடாரிகள், கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமைக் கன்றுகள் ஆகியவை அடங்கும்.