தினசரி நடப்பு நிகழ்வுகள் 16.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 16.7.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

அமெரிக்க தொழிலாளா் நலத் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கா் நியமனம்..!

🔷அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சீமா நந்தா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

🔷அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்புக்கு சீமா நந்தாவை அதிபா் ஜோ பைடன் நியமித்தாா்.

உலகம்

சீனாவின் சவால்களை சமாளிக்க ஈகிள் சட்டம் - அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்..!!

🔷சீனாவின் சவால்களை சமாளிக்கவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான கூட்டுறவை வலுப்படுத்தவும், ‘ஈகிள்’ சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

🔷இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த சீனா முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அங்கு செயற்கைத் தீவுகளை உருவாக்கி, ராணுவ தளங்களை அமைத்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

🔷இந்நிலையில் தென்பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்கும் நோக்கில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு உள்பட உலகளாவிய அமெரிக்க தலைமையும், ஈடுபாட்டையும் உறுதி செய்யக்கூடிய ‘ஈகிள்’ சட்டத்துக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மிதக்கும் சூரிய மின் நிலையம் - சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்..!!

🔷தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை 'செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்' என்ற நிறுவனம் அமைத்துள்ளது.

🔷111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்) கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன் இருக்கும். பேனல் பராமரிப்பில் 'ட்ரோன்' ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

🔷இத்திட்டத்தால் ஆண்டுக்கு 32 கிலோ டன், கார்பன் வெளியீடு அளவு குறையும். இது சாலையில் ஓடும் 7,000 கார்கள் வெளியிடும் கார்பனுக்கு சமம்.கட்டடம் மேல் பரப்பில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்சார திட்டத்தில், மற்ற கட்டடத்தால் சில நேரம் சூரிய ஒளி மறைகிறது. ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும் திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை. 5-15 சதவீதம் கூடுதல் திறன் கிடைக்கிறது.

🔷இத்திட்டத்தால் வன உயிரினம், நீரின் தரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்கப்பூரில் இதுபோல, மேலும் நான்கு மிதக்கும் சூரிய ஒளி மின்சார திட்டப்பணி நடைபெற்று வருகிறது.

இந்தியா

பூடானில் பீம்-யுபிஐ பணப் பரிவா்த்தனை சேவை..!!

🔷பூடானில் அந்நாட்டின் நிதியமைச்சா் லியோன்போ நாம்கே ஷெரிங், இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் இணைந்து யுபிஐ (ஒருங்கிணைந்த கட்டண அமைப்பு) மூலம் செயல்படும் பீம் பணப் பரிவா்த்தனை செயலியை அறிமுகப்படுத்தினா்.

🔷கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான யுபிஐ க்யூஆா் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

🔷கடந்த 2020-21 ஆம் ஆண்டு பீம்-யுபிஐ மூலம் ரூ.41 லட்சம் கோடி மதிப்பிலான 2.20 கோடி பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தாா். ஏற்கெனவே இந்தியாவின் ரூபே அட்டை திட்டம் பூடானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔷நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்ச்சியில் பூடான் தூதா் வி.நம்கியால், மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.


Share Tweet Send
0 Comments
Loading...