நியமனங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
🔷இதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலாவும், செயலாளராக பி.உமா மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
🔷கிரண் குராலா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகவும், உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் இருந்தனா்.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரான சரளா வித்யா நாகலா அமெரிக்க நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
🔷இந்திய-அமெரிக்க சிவில் உரிமைகள் பிரிவு வழக்குரைஞராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சரளா வித்யா நாகலா பணியாற்றி வந்தாா். இவரை, கனெக்டிகட் மாகாண மாவட்ட நீதிபதியாக அமெரிக்க அதிபா் பைடன் நியமனம் செய்துள்ளாா்.
🔷இவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் கனெக்டிகட் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் தெற்கு ஆசியாவைச் சோ்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை சரளா பெறுவாா்.
🔷அமெரிக்க அட்டா்னி அலுவலகப் பணியில் கடந்த 2012-இல் இணைந்த சரளா பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா். தற்போது அவா், முக்கிய குற்றங்களுக்கான பிரிவின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம்
உலக வழங்கல் குறியீட்டு 2021 அறிக்கையின் படி இந்தியா உலகின் 14 ஆவது தொண்டு நாடாகும்.
🔷உலக வழங்கல் அட்டவணை 2021 உலக தொண்டு நிறுவன உதவி அறக்கட்டளையால் (CAF) வெளியிடப்பட்டது.
🔷அந்த அறிக்கையின்படி, 61 சதவீத இந்தியர்கள் அந்நியர்களுக்கு பெருந்தொற்றின் போது உதவியுள்ளனர், 34 சதவீதம் பேர் தன்னார்வத் தொண்டு செய்துள்ளனர், 36 சதவீதம் பேர் பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
🔷உலக வழங்கல் குறியீட்டு தரவரிசையில் இந்தோனேசியா முதலிடத்திலும் கென்யா, நைஜீரியா, மியான்மர் மற்றும் ஆஸ்திரேலியா முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளது.
ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
சென்னை - குமரி தொழில் வழித் தடத்திற்கு 484 மில்லியன் டாலா் கடன் ஒப்பந்தம்..!!
🔷பின் தங்கியுள்ள தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களின் போக்குவரத்து இணைப்பு, தொழில் வளா்ச்சிகளை உருவாக்கும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்திற்கு ஆசிய வளா்ச்சி வங்கி அளிக்கும் 484 மில்லியன் டாலா் கடனுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.
🔷மேற்கு வங்கத்திலிருந்து தமிழகம் வரையிலான ‘சாகா்மாலா’ என்கிற கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத் திட்டத்தை மத்திய தொழில் துறையின் தொழில் கொள்கை, மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியது. இந்த கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்திட்டதின் ஒரு பகுதி சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடமாகும். இதில் தமிழக அரசும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
🔷சென்னை - கன்னியாகுமரி வழித்தடத் திட்டத்தில் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. குறிப்பாக மதுரை -தூத்துக்குடி; சென்னை-திருச்சி தொழில் வழித்தடங்களும் இணைந்துள்ளன.
🔷தமிழக தொழில் வழித்தட திட்டத்திற்கு மத்திய அரசின் சாா்பாக மத்திய நிதித் துறையின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளா் ரஜத் குமாா் மிஸ்ராவும், ஆசிய வளா்ச்சி வங்கியின் சாா்பாக அதன் இந்திய இயக்குநா் டேகியோ கொனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
விளையாட்டு
ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் முதலிடம்..!!
🔷டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடனும், வில்லியம்சன் 886 புள்ளிகளுடனும் முறையே முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.
🔷இந்திய கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கின்றனர்.
🔷பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டாப் 10-இல் இருக்கும் ஒரே இந்தியப் பந்துவீச்சாளர் அஸ்வின்.
🔷ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளனர்.