தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.9.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

30 நாட்களில் 1121 குளங்களை உருவாக்கி திருவண்ணாமலை மாவட்டம் சாதனை..!

🔷திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் 30 நாட்களில் 1,121 குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

🔷மாவட்ட பகுதிகளில் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, உழவின்மை உள்ளிட்ட சிக்கல்களை தவிர்க்கவும், மழை நீரை சேமிக்கவும் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

🔷ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 541 பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு 30 நாட்களில் 1,121 பண்ணைக் குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

🔷ஒவ்வொரு குளமும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் என்ற அளவில் 3 லட்சத்து 64 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 40 கோடியே 69 லட்சம் லிட்டர் தண்ணீரினை தேக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🔷இந்த முயற்சியை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ், தமிழன் புக் ஆப்ஃ ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளன.

விருதுகள்

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது - வடதோராவைச் சேர்ந்த செவிலியர் தேர்வு..!!

🔷ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு குஜராத் மாநிலம் வடதோரா நகரைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🔷நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வழங்கி வருகிறது மத்திய அரசின் சுகாதாரத் துறை.

🔷அந்த வகையில், பெருந்தொற்று பாதித்த கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்திற்கு உதவியதோடு, அவர்களின் குழந்தையையும் கவனித்துக் கொண்டதற்காக, சர் சாயாஜிராவ் பொது மருத்துவமனையின் செவிலியராகப் பணியாற்றும் பானுமதி கீவாலா இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

🔷2019 ஆம் ஆண்டில் வெள்ளத்தின் போது, மருத்துவமனை நீரில் மூழ்கிய போதும் மருத்துவ சேவை ஆற்றிய பானுமதியைக் கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

நியமனங்கள்

ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலின் செயல் தலைவராக ராஜா ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டார்..!!

🔷ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலின் செயல் தலைவராக இந்தியாவின் ராஜா ரந்தீர் சிங் பொறுப்பேற்றார்.

🔷ஐந்து முறை ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரராகவும், 1978 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான சிங், கௌரவ வாழ்க்கை துணைத் தலைவராக இருந்து அந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்கள் 4 பேர் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம்..!!

🔷விண்வெளிச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்களில் 4 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.

🔷இதற்காக ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

🔷பின்னர் அவர்கள் டிராகன் காப்ஸ்யூலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

🔷தற்போது விண்ணுக்குச் சென்றுள்ள நால்வர் குழுவினர் 3 நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள்.

சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் - 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என கணிப்பு..!!

🔷சவுதி அரேபியாவில் உள்ள பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

🔷அல் ஜவ்ப் என்ற பாலைவனப் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.

🔷இந்நிலையில் ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ராவில் உள்ள எச்சங்களுடன், ஒட்டகச் சிற்பமும் ஒத்துப் போயுள்ளது. எனவே இந்தச் சிற்பம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...