தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.8.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகா் நியமனம்..!!

💠தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வாகை சந்திரசேகா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

💠மத்திய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாதெமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றி, பேணிப் பாதுகாத்து வளா்ப்பதற்காகவும் பல்வேறு கலைப் பணித் திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது.

💠அதேபோன்று, நாட்டுப்புறக் கலைகளின் பல்வேறு பரிமாணங்களை உணரும் வகையிலும், அக்கலைகளை அழியாமல் பாதுகாப்பதற்கும், அவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞா்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அளித்து, அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியம் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

💠இந்நிலையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனுடன், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தின் தலைவா் பொறுப்பையும் அவருக்கு முதல்வா் அளித்துள்ளாா்.

💠வாகை சந்திரசேகா், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினா்- செயலராகப் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

செயற்கைக்கோள் தொலைபேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா..!!

💠செயற்கைக்கோள் தொலைபேசிகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா என்ற சிறப்பை அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா பெற்றுள்ளது.

💠வேட்டையாடுவதைத் தடுப்பதற்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் உதவுவதற்கான நடவடிக்கையில், காசிரங்கா தேசிய பூங்காவின் அதிகாரிகளுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டன.

உலகம்

மருத்துவ கழிவு நீரை சுத்தப்படுத்த, எலெக்ட்ரான் பீம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசியாவின் முதல் ஆலை..!!

💠மருத்துவ கழிவு நீரை சுத்தப்படுத்த, எலெக்ட்ரான் பீம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசியாவின் முதல் ஆலை என்ற சிறப்பை, சீனாவின் ஹுபெய் மாகாணம் பெற்றுள்ளது.

💠இந்த எலெக்ட்ரான் பீம் தொழில்நுட்பம், மருத்துவ கழிவு நீரை கிருமி நீக்கம் செய்கிறது மற்றும் கூடுதல் கிருமிநாசினி அல்லது இரண்டாம் நிலை மாசுபாடு இல்லாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சிதைக்கிறது.

இராணுவம் / பாதுகாப்பு

சீகாட் கடற்பயிற்சியில் இந்தியா..!!

💠சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி (சீகாட் SEACAT) இராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை தனது வலிமையை நிகழ்த்தி காட்டியது.

💠ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலத்தீவு, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் சீகாட் கடற்பயிற்சியில் பங்கேற்றன.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

பாராலிம்பிக் கமிட்டியுடன் இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது..!!

💠ஆகஸ்ட் 24 முதல் ஜப்பானின் டோக்கியோவில் தொடங்க உள்ள பாராலிம்பிக் போட்டிகளின் வங்கி பங்குதாரர்களில் ஒருவராக இந்திய பாராலிம்பிக் கமிட்டியுடன் (PCI) பொதுத்துறை இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

💠இந்த வங்கி, PCI உடனான ஒரு வருட கூட்டுறவு மூலம், பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கும்.

💠பாராலிம்பிக் குழுவின் தலைவர் இந்தியாவின் தீபா மாலிக் ஆவார்.


Share Tweet Send
0 Comments
Loading...