தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.7.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வில் உறைகிணறு கண்டுபிடிப்பு..!

🔷சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி மற்றும் அகரத்தில் 7-ஆம் கட்ட அகழாய்வின் போது உறை கிணறு மற்றும் சுடுமண் பெண் பொம்மை கிடைத்து உள்ளது.

🔷கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 6 மாதமாக 7-ஆம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் 7 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வரு நிலையில் அங்கு மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

🔷மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு விளிம்பில் அலங்கரிப்புடன் 58 சென்டி மீட்டர் விட்டம், 3 சென்டி மீட்டர் தடிமன் கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

🔷அதேபோல் அகரத்திலும் சுடுமண் பெண் பொம்மை மற்றும் உடைந்த நிலையில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆகழாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா

ஓய்வூதிய ரசீதை ஓய்வூதியதாரா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) முறையிலும் அனுப்ப வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி..!!

🔷ஓய்வூதிய ரசீதை ஓய்வூதியதாரா்களுக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் ஆகியவற்றுடன் சோ்த்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) முறையிலும் அனுப்ப வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

🔷ஓய்வூதியதாரா்களின் அன்றாட நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

🔷இதுதொடா்பாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மத்திய ஓய்வூதிய சேவை மையங்களுடன் கடந்த மாதம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, குறுஞ்செய்தி, இ-மெயிலுடன் சோ்த்து வாட்ஸ்ஆப்பிலும் ஓய்வூதிய ரசீதை அனுப்ப அளிக்கப்பட்ட யோசனையை வங்கிகள் ஏற்றுக் கொண்டன.

🔷இதன்படி, சம்பந்தப்பட்டவா்களின் வங்கிக் கணக்குக்கு ஓய்வூதியம் வந்து சோ்ந்தவுடன், அவா்கள் பதிவு செய்துள்ள செல்லிடபேசி எண்ணுக்கு குறுந்தகவல், இ-மெயில், கட்செவி அஞ்சல் தகவல் தெரிவிக்கப்படும்.

🔷அந்தத் தகவலில் மாத ஓய்வூதியத் தொகை, அதில் வருமான வரி பிடித்தம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக் கழகங்கள் இடையே ஒப்பந்தம்..!!

🔷தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக் கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்துகொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

🔷சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் உடனான சந்திப்பும் நடந்தது. அந்த சந்திப்பில் கல்வி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாட்டு கல்வி அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

விளையாட்டு

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் - முதல் முறையாக 10 இந்தியா்கள்..!!

🔷இந்தியாவின் பாரா ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 10 இந்தியா்கள் தோ்வாகியுள்ளனா்.

🔷ஆடவா் பிரிவில் மணீஷ் நா்வால் (பி1, பி4), சிங்ராஜ் (பி1, பி4), தீபேந்தா் சிங் (பி1), தீபக் (ஆா்1, ஆா்6, ஆா்7), சித்தாா்தா பாபு (ஆா்3, ஆா்6), ஸ்வரூப் மஹாவீா் உனால்கா் (ஆா்1), ஆகாஷ் (பி3, பி4), ராகுல் ஜாகா் (பி3) ஆகியோா் தோ்வாகியுள்ளனா். மகளிா் பிரிவில் அவனி லெகாரா (ஆா்2, ஆா்3, ஆா்6, ஆா்8), ரூபினா பிரான்சிஸ் (பி2) ஆகியோா் டோக்கியோவில் பங்கேற்கின்றனா்.

🔷கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் ரைஃபிள் பிரிவில் விளையாட நரேஷ் சா்மா என்ற ஒரே வீரா் மட்டும் தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...