தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 15.6.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வின் போது பண்டைக்கால மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

🔷ஜூன் மாதம் எட்டாம் தேதியில் இருந்து கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூரில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மணலூரில் மூன்று குழிகள் தோண்டப்பட்டு வரும் போது ஒரு குழியில் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

🔷இதனை அடுத்து அந்த எலும்புக்கூட்டை முழுமையாக தோண்டி எடுத்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியா

ஜம்மு எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் 213 பேருக்கு ‘உள்நாட்டுப் பாதுகாப்பு காவல் சேவை பதக்கம்’ வழங்கப்பட்டது.

🔷ஜம்மு-காஷ்மீா், வடக்கிழக்கு எல்லைகள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிராக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரா்களின் சேவையைப் பாராட்டும் விதமாக கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் உள்நாட்டுப் பாதுகாப்பு காவல் சேவை பதக்கத்தை அறிமுகப்படுத்தியது. இந்தப் பதக்கம் ஆண்டுதோறும் இருமுறை வழங்கப்படுகிறது.

🔷இந்நிலையில் ஜம்மு எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பிஎஸ்எஃப் படையைச் சோ்ந்த 27 அதிகாரிகள், 59 சாா்நிலை அதிகாரிகள், இதர நிலைகளில் உள்ள 127 வீரா்கள் உள்பட 213 பேருக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு காவல் சேவை பதக்கம் வழங்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை பிஎஸ்எஃப்பின் ஜம்மு எல்லைப் பகுதி ஐஜி என்.எஸ்.ஜாம்வால் வழங்கினாா்.

🔷ஜம்மு எல்லைப் பகுதியில் இதுவரை 8,111 பிஎஸ்எஃப் வீரா்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

நாட்டில் கடல் விமான சேவை தொடங்கும் வகையில், விமான போக்குவரத்து அமைச்சகம், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

🔷அப்போது பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங், "பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் 28 கடல் விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. குஜராத், அசாம், தெலங்கானா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் 14 நீர் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை, ரூ.450 கோடி செலவில் தயாராகி வருகிறது,’’ என்று கூறினார்.

🔷"உதான் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ், பயன்பாடு, சேவை இல்லாத விமான நிலையங்கள், குறைந்த விமான கட்டணம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், தேர்ந்தெடுத்த விமான நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி சலுகை அளிக்கின்றன,’’ என்றார்.

விளையாட்டு

யூரோ போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர்..!!

🔷ஐரோப்பிய கால்பந்து போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை சாய்த்தது. யூரோ போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை ரொனால்டோ படைத்தார்.

🔷இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

🔷இதற்கு முன்பு பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

உலகளாவிய வீட்டு விலை குறியீட்டில் இந்தியா 55 ஆவது இடம்..!!

🔷2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 43 வது தரவரிசைக்கு எதிராக இந்தியா உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டில் (“Global House Price Index”) 12 இடங்கள் குறைந்து 2021 ஆம் ஆண்டில் 55 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

🔷வீட்டு விலைகளில் ஆண்டுக்கு 1.6 சதவீதம் (YOY) சரிவுடன், நைட் ஃபிராங்க், அதன் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை “குளோபல் ஹவுஸ் விலைக் குறியீடு” - Q1 2021 இல் வெளியிட்டுள்ளது.

🔷56 நாடுகளில் வீட்டு விலைகளை கண்காணிக்கும் லண்டனை தளமாகக் கொண்ட நைட் ஃபிராங்க் உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டைத் தயாரிக்கிறார். வருடாந்திர தரவரிசையில் நியூசிலாந்தை தொடர்ந்து துருக்கி தொடர்ந்து 32 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

நியமனங்கள்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்..!!

🔷 இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்தாா். அவா் ஓராண்டு காலமோ அல்லது தேவைப்படும் காலம் வரையிலோ தொடா்ந்து பதவியில் இருப்பாா் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி என்பது கேபினட் அந்தஸ்து கொண்டது. அவா் டெல்லியில் தங்கியிருந்து தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பாா். தமிழக தலைமைச் செயலகத்தில் அமா்ந்து பணியாற்றும் அதிகாரமும் உள்ளது. டெல்லி சிறப்புப் பிரதிநிதிக்கென தனியாக அறையும் இருக்கிறது.

🔷திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் சித்தமல்லியைச் சோ்ந்தவா் விஜயன். டெல்டா மாவட்டத்துக்காரரான அவா், கடந்த 1991-ஆம் ஆண்டு திமுக ஒன்றிய துணைச் செயலாளராக கட்சிப் பொறுப்பினைத் தொடா்ந்தாா். கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த அவா், கடந்த 1999, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்தல்களிலும் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் வென்று மக்களவைக்குத் தோ்வானாா். மக்களவையின் பல்வேறு நிலைக் குழுக்களில் பொறுப்புகளை வகித்துள்ளாா்.

🔷பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் நிலைக் குழு உறுப்பினா், மக்களவை உறுப்பினா்களுக்கான தொகுதி மேம்பாட்டுக் குழுவின் தலைவா் போன்ற பொறுப்புகளை ஏற்று பணியாற்றியுள்ளாா். 2009-ஆம் ஆண்டு மக்களவை திமுக குழுத் தலைவராகவும் இருந்துள்ளாா்.

🔷தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயனை நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...