தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.9.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளர் நியமனம் - அமர்நாத் ராமகிருஷ்ணன்..!!

🔷அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட பணிகளால் கீழடியில் தமிழரின் தொன்மங்கள் வெளிவரத்தொடங்கிய நிலையில், அரசியல் சிக்கல்களால் அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் கோவாவிலிருந்து மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

🔷சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பான முழு அறிக்கையை தயாரிக்கும் சூழலில் அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

🔷இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதன் வழக்கு விசாரணையில் மத்திய தொல்லியல் துறை 7 பக்க ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது.

🔷அப்போது வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, அமர்நாத் ராமகிருஷ்ணனையே முழு அறிக்கையையும் தயாரிக்க அறிவுறுத்தி ஏழு அவகாசம் அளித்து கெடு விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து கோவாவிலிருந்து அவர் மீண்டும் தமிழகத்திற்கு திரும்பவுள்ளார். இது தமிழ் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

PM-KUSUM இன் கீழ் சோலார் பம்புகளை நிறுவுவதில் ஹரியானா முதலிடம்..!!

🔷மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தரவுகளின்படி, பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஈவம் உத்தன் மகாபியான் (PM-KUSUM) கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில் நாட்டின் மற்ற மாநிலங்களில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது.

🔷ஹரியானா 2020-21 ஆம் ஆண்டிற்கான 15,000 பம்புகளின் இலக்குகளில் 14,418 பம்புகளை நிறுவியுள்ளது.

🔷ஹரியானாவுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான 15,000 பம்புகள் இலக்கு வழங்கப்பட்டது, இதன் மொத்த செலவு 520 கோடி ரூபாய்.

இந்தியா

உத்தரப் பிரதேச அரசு பல்கலைக் கழக கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்..!!

🔷உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

🔷395 கல்லூரிகளை உள்ளடக்கிய ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகம் 92 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

🔷சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளருமான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், பெருமைப்படுத்தும் வகையிலும் உத்தரப் பிரதேச அரசு சார்பில் அவரது பெயரில் பல்கலைக் கழகம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இப்பல்கலைக் கழகத்தின் புதிய கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

விளையாட்டு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா ஓய்வு அறிவிப்பு..!!

🔷அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா அறிவித்துள்ளார்.

🔷தன் சமூக வலைதள பக்கத்தில், எனது டி20 ஷூக்களுக்கு 100 சதவீத ஓய்வு அளிக்க விரும்புகிறேன். அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெறுகிறேன். உறுதுணையாக இருந்த சக வீரர்கள், போட்டித் தேர்வர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

🔷கடந்த 2011 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் ஓய்வு கொடுத்துள்ளார்.

🔷சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டுமொத்தமாக 546 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள யார்க்கர் மன்னனின் தலைமையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...