தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 14.6.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

ரெபேக்கா கிரின்ஸ்பன் UNCTAD-இன் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்..!

🔷வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (United Nations Conference on Trade and Development (UNCTAD)) பொதுச்செயலாளராக ரெபேக்கா கிரின்ஸ்பன் நியமிக்கப்பட்டார்.

🔷ரெபேக்கா கிரின்ஸ்பன் கோஸ்டா ரீகன் நாட்டின் பொருளாதார நிபுணர் ஆவார்.

🔷வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் மற்றும் மத்திய அமெரிக்கர் ஆவார். அவர் நான்கு ஆண்டு பதவியில் இருப்பார்.

🔷ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் அவர்களால் வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விளையாட்டு

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது - வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் தேர்வு..!!

🔷மே மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் தேர்வாகியுள்ளார்.

🔷மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

🔷விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

🔷முதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வானார்கள்.

🔷இந்நிலையில் மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆடவர் பிரிவில் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கையின் பிரவீண் ஜெயவிக்ரமா, வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் இடம்பெற்றார்கள். மகளிர் பிரிவில் கேத்ரின் பிரைஸ், கேபி லூயிஸ், லியா பால் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டார்கள்.

🔷இந்நிலையில் மே மாதத்துக்கான சிறந்த வீரராக வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிமும் மகளிர் பிரிவில் ஸ்காட்லாந்து ஆல்ரவுண்டர் கேத்ரின் பிரைஸும் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியா

அயோத்தியில் ரூ.400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம் - உ.பி. அமைச்சரவை ஒப்புதல்..!!

🔷அயோத்தியில் ரூ.400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

🔷அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்படவுள்ள நிலையில், தொலைத்தூர பகுதிகளில் இருந்து பக்தா்கள் கோயிலுக்கு வருவா். இதைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் சா்வதேச தரத்தில் பேருந்து நிலையம் அமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

🔷அங்கு ஏற்கெனவே உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநில கலாசாரத் துறை வசமுள்ள 9 ஏக்கா் நிலம் போக்குவரத்துத் துறையிடம் வழங்கப்படும். ரூ.400 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் பக்தா்களுக்கான அனைத்து வசதிகளும் இடம்பெறும்.

🔷இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து அயோத்திக்கும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இடையே பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தாா்.


Share Tweet Send
0 Comments
Loading...