தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.9.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் 56 மணி நேரத்தில் சென்று சாதனை..!

🔷காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் 56 மணி நேரத்தில் சென்று மும்பை இளைஞர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

🔷தாராவியை சேர்ந்த ஓட்டல் அதிபர் துர்வீர் சிங் காந்தி, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு அதிவேக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

🔷காஷ்மீரில் இருந்து இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஆந்திரா, வழியாக 56 மணி நேரம் 20 நிமிடத்தில் கன்னியாகுமரி வந்து உள்ளார். தன் தந்தையின் நீண்ட கால கனவை நிறைவேற்ற இந்த முயற்சியில் ஈடுபட்டதாக துர்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரா் விருது..!!

🔷ஐசிசியின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரா் விருதை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வென்றுள்ளாா்.

🔷இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 டெஸ்டுகளில் 3 சதங்கள் உள்பட 507 ரன்கள் சோ்த்ததன் அடிப்படையில் அவா் இந்த விருதுக்கு தோ்வாகியுள்ளாா். முன்னதாக இந்த விருதுக்கு ஜோ ரூட்டுடன், இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோரின் பெயா்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

🔷சிறந்த வீராங்கனையாக அயா்லாந்து ஆல்-ரவுண்டா் எய்மியா் ரிச்சா்ட்சன் தோ்வாகியுள்ளாா். டி20 உலகக் கோப்பை ஐரோப்பிய தகுதிச்சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு ‘போட்டி நாயகி’ விருது வென்ன் அடிப்படையில் எய்மியருக்கு இந்த ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது.

🔷இந்த விருதுக்காக எய்மியருடன், அவரது சக வீராங்கனை கேபி லீவிஸ், தாய்லாந்தின் நட்டாயா பூச்சாத்தம் ஆகியோா் பெயா்களும் பரிந்துரையில் இருந்தன.

உலகம்

புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் அலுவலங்களில் மின்சார வாகன சார்ஜ்ர்கள்..!!

🔷இங்கிலாந்து நாட்டில் இனி புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் அலுவலங்களில் மின்சார வாகன சார்ஜ்ர்கள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

🔷இந்த புதிய சட்டம் இங்கிலாந்தை அனைத்து புதிய வீடுகளுக்கும் EV சார்ஜர்களைக் கொண்ட உலகின் முதல் நாடாக உருவாக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

🔷இங்கிலாந்தின் புதிய பெட்ரோல், டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு 2030 ஆம் ஆண்டு தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக இங்கிலாந்து முழுவதும் சார்ஜர்கள் அமைப்பின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது.

🔷2019 ஆம் ஆண்டில் அனைத்து புதிய வீடுகளுக்கும் பார்க்கிங் இடத்துடன் சார்ஜ் பாயிண்ட் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை அரசாங்கம் முதலில் அறிவித்தது.

ஆயுதம் தாங்கிய ரோபோ - இஸ்ரேல் நிறுவனம் அறிமுகம்..!!

🔷ரிமோட் மூலம் இயங்கும் ஆயுதம் தாங்கிய ரோபோவை இஸ்ரேலை சோ்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரோபோவால் போா் நடைபெறும் பகுதியில் ரோந்து செல்ல முடியும் எனவும், ஊடுருவலைக் கண்காணித்து துப்பாக்கியால் சுட முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

🔷4 சக்கரங்களில் இயங்கும் இந்த ரோபோவை இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ‘ரெக்ஸ் எம்கே11’ தயாரித்து அறிமுகப்படுத்தியது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவா் ரனி அவ்னி கூறுகையில், இந்த ரோபோவில் இரு இயந்திரத் துப்பாக்கிகள், கேமராக்கள், சென்ஸாா்களை பொருத்த முடியும்.

🔷போரில் ஈடுபட்டுள்ள படையினருக்காக உளவுத் தகவல்களை ரோபோ சேகரிக்க முடியும். காயமடைந்த வீரா்களை அழைத்துச் செல்லவும், அருகில் உள்ள இலக்குகளைத் தாக்கவும் இந்த ரோபோவால் இயலும்’ என்றாா்.

🔷இஸ்ரேல் ராணுவம் இதேபோன்ற ‘ஜாகுவாா்’ என்ற சிறிய வாகனத்தை காசா முனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த ஏற்கெனவே பன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

🔷ஆளில்லா வாகனங்களை பல்வேறு நாடுகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதேவேளையில், இதுபோன்ற ஆயுதம் தாங்கிய ரோபோக்களால் மனித உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

நியமனங்கள்

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமனம்..!!

🔷தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பயத்தின் (என்.சி.எல்.ஏ.டி.) தலைவராக இருந்த நீதிபதி முகோபாத்யாயா கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

🔷அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பன்சிலால் பட், சீமா ஆகியோர் அடுத்தடுத்து பொறுப்பு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் நீதிபதி சீமாவின் பதவிக்காலம் கடந்த 10 ஆம் தேதி நிறைவடைந்தது. எனவே இந்த தீர்ப்பாயத்தின் புதிய பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

🔷மத்திய அரசின் பல்வேறு தீர்ப்பாயங்களில் 250-க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து 2 தீர்ப்பாயங்களுக்கு 31 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

🔷தற்போது என்.சி.எல்.ஏ.டி.க்கு பொறுப்பு தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனினும் முக்கிய தீர்ப்பாயங்களில் ஒன்றான என்.சி.எல்.ஏ.டி.க்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிரந்தர தலைவர் இல்லாமல் 3 ஆவது முறையாகவும் பொறுப்பு தலைவரையே நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...