தமிழ்நாடு
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பொறுப் பேற்றார்.
🔷சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 ஆவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிய நீதிபதி ஆர்.சுப்பையா கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
🔷இதையடுத்து நீதிபதி ஆர்.சுப்பையாவை, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நுகர்வோர் குறைதீர்ஆணையத்தின் தலைவராக ஜூலை 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் என மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பதிவாளர் இரா.மத்தேயூ தெரிவித்துள்ளார்.
🔷நீதிபதி ஆர்.சுப்பையா, மறைந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல்பாண்டியனின் மகன். கடந்த 1959 ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி ஆர்.சுப்பையா, 1983 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதிவழக்கறிஞராகப் பதிவு செய்து, பல்வேறு துறைகளில் 23 ஆண்டுகள் வழக்கறிஞராகத் திறம்பட பணியாற்றியவர்.
🔷சென்னை உயர் நீதிமன்றத்தில், 2008 ஆம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 63 ஆயிரத்து 420 வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 81 ஆயிரத்து 33 வழக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 453 வழக்குகளுக்கு அவர் தீர்வு கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
ஷியாம் சீனிவாசன் பெடரல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமனம்..!!
🔷ஷியாம் சீனிவாசன் பெடரல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
🔷ஷியாம் சீனிவாசனை பெடரல் வங்கியின் நிர்வாக இயக்குநராக மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்க பெடரல் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
🔷ஷியாம் சீனிவாசன் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முன்னணி பன்னாட்டு வங்கிகளுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
இந்தியா
மணிப்பூரில் 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஶ்ரீ நிதின் கட்கரி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்..!!
🔷மணிப்பூரில் 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஶ்ரீ நிதின் கட்கரி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
🔷மணிப்பூரில் 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஶ்ரீ நிதின் கட்கரி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். மொத்தம் 298 கி.மீ நீளமுடையது.
விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் புதிய சாதனை..!!
🔷டி20 போட்டியில் 14,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் நிகழ்த்தியுள்ளார்.
🔷இதுவரை 431 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள கெயில், 14,038 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் உள்ள பொலார்ட், 545 ஆட்டங்களில் விளையாடி 10,836 ரன்கள் எடுத்துள்ளார்.