தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 13.6.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!!

🔷சர்வதேச தடகள போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

🔷ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் தனது கடைசி முயற்சியில் 83.18 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

🔷ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.07 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து இருப்பது அவரது சிறந்த செயல்பாடாகும்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்..!!

🔷பாரீசில் நடந்த இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாசை எதிர்கொண்டார். சமபலத்துடன் ஆடிய இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். 4 மணி 11 நிமிடங்கள் நடைபெற்ற விறுவிறுப்பாக ஆட்டத்தின் முடிவில் கணக்கில் வெற்றி பெற்றார்.

🔷கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வெல்வது இது 19-ஆவது முறையாகும். பிரெஞ்ச் ஓபனை இரண்டாவது முறையாக ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார்.

உலகம்

டுவிட்டருக்கு தடை - இந்தியாவின் கூ செயலியில் கணக்கை தொடங்கியது நைஜீரியா..!!

🔷பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக டுவிட்டர் சமூக ஊடகத்தில் நைஜீரிய அதிபர் முகமது புஹாரி கருத்து பதிவிட்டிருந்தார். அதனை அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதனைத்தொடர்ந்து பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாகக் கூறி நைஜீரியாவில் டுவிட்டர் பயன்பாடுகளுக்கு நைஜீரிய அரசு தடை விதித்தது.

🔷இதையடுத்து இந்தியாவின் கர்நாகடம் மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'கூ' செயலியின் பயன்பாடு நைஜீரியாவில் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், 'கூ' செயலியில் நைஜீரியா அரசு தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.

இன்டர்போல் ஐ - ஃபேமிலியா என்ற புதிய உலகளாவிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..!!

🔷குடும்ப டிஎன்ஏ மூலம் காணமல் போனவர்களை அடையாளம் காணவும், உறுப்பு நாடுகளில் குளிர் வழக்குகளை தீர்க்க காவல்துறைக்கு உதவவும் இன்டர்போல் “ஐ - ஃபேமிலியா” என்ற புதிய உலகளாவிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷இந்த மாதம் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்ட ஒரு தரவுத்தளமாக இதை விவரித்த இன்டர்போல், இது அதிநவீன அறிவியல் ஆராய்ச்சியைப் பயன்படுத்துவதாகவும், உலகெங்கிலும் காணாமல் போனவர்கள் அல்லது அடையாளம் தெரியாத மனித எச்சங்களை அடையாளம் காண உறவினர்களின் டி.என்.ஏ-வை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளது.

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்பு..!!

🔷இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

🔷இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 போ் பெண்கள்.

இந்தியா

இந்திய கடலோர படையில் அதிநவீன இலகு ரக எம்.கே.3 ஹெலிகாப்டர் சேர்ப்பு..!!

🔷உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் எம்.கே-3 இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது.

🔷பாதுகாப்புத் துறைச் செயலர் அஜய்குமார் இந்த ஹெலிகாப்டர்களை கடலோர காவல் படையில் சேர்த்தார். இந்த நவீன ஹெலிகாப்டர்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

   


Share Tweet Send
0 Comments
Loading...