தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.9.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

ரஷ்ய, ஆப்பிரிக்க சிகரங்களின் உச்சியை எட்டி சிஐஎஸ்எஃப் வீராங்கனை சாதனை..!

🔷ரஷ்யா, ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய இடைவெளியில் அடைந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப்) சாதனை படைத்துள்ளாா்.

🔷இதுதொடா்பாக தன்சானியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பினயா பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘சிஐஎஸ்எஃப் வீராங்கனை கீதா சாமோத்தா கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்தாா். அவா் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை எட்டினாா்.

🔷இதன் மூலம் இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய கால இடைவெளியில் எட்டிய இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

🔷ரஷ்யாவிலுள்ள எல்பிரஸ் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டா் உயரம் கொண்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டா் உயரம் கொண்டது.

விளையாட்டு

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெட்வதேவ்..!!

🔷அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் ரஷ்ய வீரர் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

🔷நியூயார்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் டெனில் மெட்வதேவை எதிர்கொண்டார்.

🔷ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய மெட்வதேவ் எளிதில் வென்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

🔷3 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற நிலையில், யு.எஸ். ஓபன் வெற்றியை எதிர்பார்த்து இறுதிப் போட்டியில் விளையாடிய ஜோகோவிச்சின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தியா

உதவித் தொகைக்கு பதிலாக மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி - ஆந்திர அரசு..!!

🔷ஆந்திராவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மாணவ, மாணவிகளின் தாயாருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற ரூ.14 ஆயிரம் உதவித்தொகைக்கு பதிலாக இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

🔷இதற்காக 5,42,365 அடிப்படை பிரிவு மடிக்கணினிகளும், பாலிடெக்னிக், தொழில்முறை பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்காக நவீன திறன் கொண்ட 19,853 மடிக்கணிகளும் வாங்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

🔷இந்த மொத்த மடிக்கணினி கொள்முதலுக்காக ரூ.100 கோடிக்கும் அதிகமாக செலிவிடப்படும் என்றும் இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையத்தை மாநில அரசு அமைத்துள்ளது.

🔷அடுத்த கல்வி ஆண்டில் 5.42 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் அரசின் நிதி உதவி திட்டத்துக்கு பதிலாக, இலவச மடிக்கணினி திட்டம் மூலம் பயனடைவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜிப்மர் மருத்துவமனை சூரிய சக்தி மின்சார தயாரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிப்பு..!!

🔷புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

🔷மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 7 கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டம் (சோலாா் பேனல்) தொடக்க விழாவில் பங்கேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

🔷ஜிப்மா் வளாகத்தில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அதிகாரிகள், ஜிப்மர் இயக்குநர் ராஜேஷ் அகர்வால், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

🔷குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா மேற்பாா்வையில் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் மிகப் பெரிய திறந்தவெளி பெரணி பண்ணை..!!

🔷நாட்டின் மிகப் பெரிய திறந்தவெளி பெரணிச்செடி பண்ணை உத்தரகண்டில் அமைக்கப்பட்டுள்ளது.

🔷அல்மோரா மாவட்டத்தின் ராணிகேட் பகுதியில் 4 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பண்ணையை உத்தரகண்ட் வனத்துறையைச் சோ்ந்த ஆராய்ச்சிப் பிரிவு 3 ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கியுள்ளது. 120 வகையான பெரணிச்செடிகள் இந்தப் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ளன.

🔷இயற்கை சூழலில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய திறந்தவெளிப் பண்ணையாக இது திகழ்வதாக மாநில தலைமை வனப் பாதுகாவலா் சஞ்சீவ் சதுா்வேதி தெரிவித்தாா். கடல்மட்டத்திலிருந்து 1,800 மீட்டா் உயரத்தில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

🔷மேற்கு, கிழக்கு இமயமலைப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலை உள்ளிட்டவற்றில் காணப்படும் பெரணிச்செடிகள் இந்தப் பண்ணையில் வளா்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகம்

கண்காணிப்பு கேமரா - ஐ.நா.வுக்கு ஈரான் அனுமதி..!!

🔷தங்களது அணு மையங்களில் ஐ.நா.வின் சா்வதேச அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு பொருத்தியுள்ள கேமராக்களைப் புதுப்பிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.

🔷அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலகி, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்ததால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் தங்களது அணு மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஈரான் எதிா்த்து வந்தது. எனினும், இது தொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் அந்த கேமராக்களை புதுப்பிக்க ஈரான் அனுமதித்துள்ளது.

அமெரிக்காவில் 5 ஆயிரம் டாலர் சூப்பர் பீஸ் செலுத்தினால் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு..!!

🔷அமெரிக்காவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு நீதித்துறையின் ஒப்புதல் கிடைத்திருப்பதையடுத்து, கிரீன் கார்டு பெற முடியாமல் காத்திருப்பில் உள்ள இந்தியர்கள் 5 ஆயிரம் டாலர் சூப்பர் ஃபீஸ் கட்டி நிரந்தர அமெரிக்க விசா பெற முடியும்.

🔷குழந்தையாக அமெரிக்காவில் H -1B விசாவுடன் குடியேறி 21 வயதை எட்டியிருப்பவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைக்க வழி பிறந்துள்ளது.

🔷அமெரிக்காவில் பணி நிமித்தமாக செல்வோருக்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...