தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.8.2021 (Daily Current Affairs)

விளையாட்டு

உலக தடகள வீரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் நீரஜ் சோப்ரா..!!

💠ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி தந்த நீரஜ் சோப்ரா, உலக தடகள வீரர்களின் பட்டியலில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

💠ஆயிரத்து 315 புள்ளிகளுடன் அவர் இந்த இடத்தை பிடித்துள்ள நிலையில், ஜெர்மனியின் ஜோஹன்னஸ் வெட்டர் ஆயிரத்து 396 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

💠நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் 87 புள்ளி 58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் பெற்ற நிலையில் அவர் தங்கம் வென்றதை 10 மேஜிக்கல் மோமன்ட்ஸ்களில் ஒன்றாக உலக தடகள சங்கம் பட்டியலிட்டுள்ளது.

இந்தியா

நாட்டின் முதலாவது உபரி நீர் நகரமாக இந்தூர் தேர்வு..!!

💠இந்தியாவின் மிக சுத்தமான நகரம் என்ற பெயரை பெற்றுள்ள இந்தூர், இப்போது நாட்டின் முதலாவது உபரி நீர் நகரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

💠இந்த ஆண்டுக்கான சுத்தம், சுகாதாரம் மற்றும் தூய்மை நகரங்களுக்கான சர்வேயில் , இந்தூருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

💠இந்த பெருமையை பெற்றதன் மூலம் மத்திய பிரதேசத்தின் வர்த்தக தலைநகர் என கூறப்படும் இந்தூர், நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக, டுவிட்டரில் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் பதக்க மங்கை லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி..!!

💠டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் கௌரவித்தார்.

💠அசாமுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வந்த லவ்லினாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரை மாதந்தோறும் ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் பாரிஸில் தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். குவாஹட்டியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும்.

💠லவ்லினாவின் குத்துச்சண்டை பயணத்தில் அங்கமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங் மற்றும் ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் மக்கள் நன்றியின் வெளிப்பாடாக தலா ரூ. 10 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும்.

💠லவ்லினாவின் கிராமம் இடம்பெறும் தொகுதியில் குத்துச்சண்டை அகாடமி வசதியுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது.

நகர்ப்புறத்தில் வன வள உரிமைகளை அங்கீகரிக்கும் முதல் மாநிலம் சத்தீஸ்கர்..!!

💠4,127 ஹெக்டேர் காடுகளுக்கு மேல் தம்தாரி மாவட்டத்தில் வசிப்பவர்களின் உரிமைகளை மாநில அரசு அங்கீகரித்து, நகர்ப்புறத்தில் சமூக வன வள உரிமைகளை அங்கீகரித்த முதல் மாநிலமாக சத்தீஸ்கர் ஆனது.

💠புலிகள் காப்பகப் பகுதியின் மையப் பகுதியில் உள்ள 5,544 ஹெக்டேர் காடுகளின் சமூக வள உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டன.

நியமனங்கள்

கமலேஷ் குமார் பந்த் புதிய NPPA தலைவராக நியமிக்கப்பட்டார்..!!

💠இமாச்சலப் பிரதேச கேடரின் 1993 ஆம் ஆண்டு தொகுதி ஐஏஎஸ் அதிகாரி கமலேஷ் குமார் பந்த், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவால் தேசிய மருந்து விலை ஆணையத்தின் (NPPA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

💠மருந்து விலை நிறுவனத்திற்கு தற்போது ஐஏஎஸ் அதிகாரி சுப்ரா சிங் தலைமை தாங்கினார், அவர் 2018 இல் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

💠சிங் பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின்படி, அவரது பணியாளர் மாநிலமான ராஜஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.


Share Tweet Send
0 Comments
Loading...