தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.7.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 12.7.2021 (Daily Current Affairs)

சாதனைகள்

உலகின் மிகப் பெரிய Mississippi ஆற்றை படகு மூலம் கடந்து பெண் சாதனை..!

🔷அமெரிக்காவில் பாயும் உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான Mississippi ஆற்றை படகு மூலம் பெண் ஒருவர் தன்னந்தனியாக கடந்துள்ளார்.

🔷"Mississippi Mermaid என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பெண் கடந்த மே மாதம் 17 ஆம் தேதி Minnesota-வில் தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.

🔷45நாட்கள் 8 மணிநேரம் பயணம் செய்த அவர், அந்த ஆறு கடலில் கலக்கும் Louisianaவில் பயணத்தை நிறைவு செய்தார்.

இந்தியா

இந்தியாவின் முதல் தனியார் LNG வசதி ஆலையை நாக்பூரில் நிதின் கட்கரி திறந்து வைத்தார்..!!

🔷மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்தியாவின் முதல் தனியார் திரவ இயற்கை எரிவாயு (LNG) வசதி ஆலையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.

🔷நாக்பூர் ஜபல்பூர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காம்ப்டி சாலையில் இந்த ஆலை ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் பைத்யநாத் ஆயுர்வேத குழுமத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கிரிப்டோகாமிக் கார்டன் உத்தரகண்டில் திறக்கப்பட்டது..!!

🔷இந்தியாவின் முதல் கிரிப்டோகாமிக் தோட்டம், சுமார் 50 வெவ்வேறு இனங்கள் வளர்க்கப்பட்டு, உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனின் தியோபன் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

🔷இந்த தோட்டம் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் சக்ரதா நகரில் அமைந்துள்ள இந்த தோட்டத்தை சமூக ஆர்வலர் அனூப் நாடியால் திறந்து வைத்தார்.

விளையாட்டு

போர்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கோல்டன் பூட்..!!

🔷யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது போர்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

🔷நடந்து முடிந்த யூரோ தொடரில் போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக் (Patrik Schick) ஆளுக்கு தலா 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர்.

🔷இருந்தபோதும் ரொனால்டோ சக வீரர் ஒருவர் கோல் அடிக்க பந்தை பாஸ் செய்து உதவியதால் அவருக்கு கோல்டன் பூட் வழங்கப்பட்டது.


Share Tweet Send
0 Comments
Loading...