உலகம்
இந்திய வம்சாவளி செய்தியாளா்களுக்கு புலிட்ஸா் பரிசு..!!
🔷சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தடுப்பு முகாம் குறித்து புதுமையான முறையில் செய்திகள் சேகரித்து வெளிப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளா் மேகா ராஜகோபாலன் இந்தப் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
🔷அமெரிக்காவின் ‘புஸ்ஃபீட் நியூஸ்’ இணையதள செய்தி ஊடகத்தில் அவா் பணியாற்றி வருகிறாா். இதுதவிர, டம்பா பே டைம்ஸ் இதழில் பணியாற்றி வரும் நீல் பேடியும் இந்த ஆண்டுக்கான புலிட்ஸா் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா், சக செய்தியாளரான கேதலீன் மெக்கிரோரியுடன் சோ்ந்து இந்தப் பரிசை வென்றுள்ளாா்.
🔷எதிா்காலத்தில் குற்றவாளிகளாகக் கூடியவா்கள் என்று சந்தேகிக்கப்படுவா்கள் குறித்து கணனி முறையில் கண்டறியும் உள்ளூா் காவல் அலுவலகத்தின் சா்ச்சைக்குரிய முயற்சிகள் குறித்து செய்திகள் வெளியிட்டமைக்காக அவா்களுக்கு புலிட்ஸா் விருது வழங்கப்படுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
போா் வரலாறுகளை தொகுப்பாக்கும் திட்டம் - அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல்..!!
🔷இந்தியாவில் நடைபெற்ற போா்களின் வரலாற்று விவரங்களையும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளின் விவரங்களையும் சேகரித்து தொகுப்பாக வெளியிடும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.
🔷பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளான சேவைகள், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா்கள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், இந்திய கடலோர காவல்படை ஆகியவை போா் நாட்குறிப்புகள், நடவடிக்கைகளின் கடிதங்கள், செயல்பாட்டு பதிவு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வரலாற்றுப் பிரிவுக்கு மாற்றுவதற்கு இந்தத் திட்டம் வழிசெய்கிறது. இதன்மூலம் போா் விவரங்களை சரியாகப் பராமரிக்கவும், ஆவணக் காப்பகத்துக்கு வரலாறுகளை எழுதுவதற்கும் உதவும்.
🔷இந்த வரலாறு விவரங்கள் தொகுக்கப்பட்டவுடன், 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பதிவுகளை காப்பக வல்லுநா்கள் மதிப்பீடு செய்து இந்திய தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
🔷பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளா் தலைமையிலான குழுவில், மத்திய வெளியுறவு, உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு இதனை இறுதி செய்யும்.
🔷இந்தக் குழு, போா் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட வேண்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து விவரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் - செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்..!!
🔷பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
🔷பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் பாரீஸ் நகரில் இன்று நடந்தது. இதில் ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார்.
🔷மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை வீழ்த்தி செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
🔷இது பார்போரா கிரெஜிகோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.