இந்தியா
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு..!!
🔷காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி பாரதியார் பெயரில் தமிழ் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
🔷மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
🔷சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100 ஆவது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர், பாரதியின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
🔷இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, உலகின் மிக மூத்த மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.
🔷சுப்பிரமணிய பாரதியின் 100 ஆவது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், அவரது பெயரில் தமிழுக்கான ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என மோடி அறிவித்தார்.
இந்தியா
ட்ரோன் மூலம் மருந்து டெலிவரி செய்யும் திட்டம் தொடக்கம்..!!
🔷தெலுங்கானாவில் ட்ரோன் மூலம் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகள் டெலிவரி செய்யும் Medicine from the sky என்ற திட்டம் நாட்டில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
🔷விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்த இந்தத் திட்டம் மூலம், தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்டவை தொலை தூர இடங்களுக்கு டிரோன் மூலம் டெலிவரி செய்யப்படும்.
🔷முதற்கட்டமாக தெலுங்கானாவில் ட்ரோன் பறக்க தடை இல்லாத 16 பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உலக வர்த்தக கூட்டமைப்பு, நிதி ஆயோக், அப்போலோ மருத்துவமனையின் Health net global ஆகியவற்றுடன் இணைந்து விகாரபாத் மாவட்டத்தில் தெலுங்கானா அரசு இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்துகிறது.
ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
DP World குழுமம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு..!!
🔷ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டிபி வேர்ல்டு நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டாயிம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
🔷DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் சரக்குப் பெட்டக முனையம், தகவல் தரவு மையம் உள்ளிட்டவற்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
🔷சென்னை அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centres நிறுவனத்தின் தகவல் தரவு மையத்துக்கும் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு
ஜோ-ராஜீவ் ஜோடி சாம்பியன்..!!
🔷யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி/அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் ஆனது.
🔷போட்டித்தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருந்த அந்த ஜோடி இறுதிச்சுற்றில் போட்டித்தரவரிசையில் 7 ஆம் இடத்திலிருந்த இங்கிலாந்தின் ஜேமி முா்ரே/பிரேஸின் புருனோ சோரஸ் இணையை வீழ்த்தியது.
🔷ஜோ/ராஜீவ் ஜோடிக்கு இது 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனிலும் இந்த இணை பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
🔷இதனிடையே, மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்நாலி/கோகோ கௌஃப் இணை, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசா்/சீனாவின் ஷுவாய் ஸாங் ஜோடியை சந்திக்கிறது.
விருதுகள்
இந்தியத் தொழில் கூட்டமைப்பு - National Energy Leader விருது..!!
🔷ஜிஎம்ஆர் தலைமையிலான டெல்லி சர்வதேச விமான நிலையமானது இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 'தேசிய ஆற்றல் தலைவர்' (National Energy Leader) மற்றும் 'சிறந்த ஆற்றல் திறன் அலகு' ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
🔷ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமும் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 'தேசிய ஆற்றல் தலைவர்' மற்றும் 'சிறந்த ஆற்றல் திறன் அலகு' விருதுகளை வென்றுள்ளது.
🔷இது 22 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் ஆற்றல் மேலாண்மையில் சிறந்து விளங்குவதால் வழங்கப்பட்டது.
🔷இது இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு - பசுமை வணிக மையத்தினால் 22 ஆவது ‘ஆற்றல் திறன் உச்சி மாநாட்டின்’ போது ஏற்பாடு செய்யப்பட்டது.
🔷இந்த விருதுகளின் குறிக்கோள், அன்றாடச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல்-திறன் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அங்கீகரிப்பதாகும்.
🔷வானூர்தி நிலையங்களுக்கான பன்னாட்டுக் குழுவின் விமான நிலையக் கரிம அங்கீகாரத் திட்டத்தின் கீழ் ஆசிய பசிபிக்கின் முதல் நிலை 4+ (மாற்று நிலை) அங்கீகாரம் பெற்ற விமான நிலையம் டெல்லி சர்வதேச விமான நிலையமாகும்.
🔷கரிமச் சமநிலை கொண்ட ஒரு விமான நிலையமான ஐதராபாத் சர்வதேச விமான நிலையமானது கார்பன் நிலை 3 + "சமநிலை" அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது.