தமிழ்நாடு
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு..!
💠தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
💠இதற்கான விருதும் 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சுதந்திர தின விழாவின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். அதேபோல், சிறந்த 3 நகராட்சிகளாக நீலகிரியின் உதகை, நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு மற்றும் தேனியின் சின்னமனூர் தேர்வாகியுள்ளது.
💠சிறந்த 3 பேரூராட்சிகளாக திருச்சி மாவாட்டத்தின் கல்லக்குடி, கடலூரின் மேல்பாட்டம்பாக்கம், மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கோட்டையூரும் தேர்வாகியுள்ளன.
உலகம்
பிரிட்டனில் சாதனை அளவில் இந்திய மாணவா்கள் சோ்க்கை..!!
💠பிரிட்டனில் பல்கலைக்கழக மற்றும் மேற்படிப்புக்காக இந்தியாவிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு 3,200 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
💠பிரிட்டனின் ஒருங்கிணைப்பட்ட விண்ணப்பப் பரிசீலனை முறையின் கீழ், 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைகழக மற்றும் மேற்படிப்புக்காக இந்தியாவைச் சோ்ந்த 3,200 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
💠இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். முந்தைய ஆண்டைவிட தற்போது 19 சதவீதம் அதிக மாணவா்கள் இந்தியாவிலிருந்து சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்தியா
ஏடிஎம்களில் பணம் இல்லாத வங்கிகளுக்கு அபராதம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!
💠அக்டோபர் மாதம் முதல், ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணம் எடுக்க முயற்சிக்கும் போது பணமில்லாமல் இருந்தால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
💠ஏடிஎம்களில் பணமில்லாத சூழலில் வாடிக்கையாளர்கள் இன்னலுக்குள்ளாவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு மாதத்தில் பத்து மணி நேரத்துக்கு மேல் பணமின்றி இருக்கும் ஒவ்வொரு ஏடிஎம்முக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
💠ஏடிஎம்களில் பணமில்லாதது குறித்த மாதாந்திர அறிக்கையை மறு மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டுத் துறைக்கு வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
விருதுகள்
மத்திய அரசின் விருதுக்கு தமிழகத்தின் 8 காவலர்கள் தேர்வு..!!
💠குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தியவர்களுக்கான மத்திய அரசின் விருதுக்கு தமிழகத்தின் 8 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
💠ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தியவர்களுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும். இந்நிலையில், இந்தாண்டிற்கான பட்டியலில் 8 தமிழக காவலர்கள் தேர்வாகியுள்ளனர்.
💠மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த புலன் விசாரணை விருதுக்கு 152 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
💠இதில், சிபிஐ பிரிவில் 15, மத்தியப் பிரதேசத்தில் 11, மகாராஷ்டித்தில் 11, உத்தரப்பிரதேசத்தில் 10, கேரளத்தில் 9, ராஜஸ்தானில் 9, தமிழகத்தில் 8, பிகாரில் 7, குஜராத்தில் 6, கர்நாடகத்தில் 6 மற்றும் தில்லியில் 6 காவலர்கள் தேர்வாகியுள்ளனர்.
💠தமிழகத்தை சேர்ந்த சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைசெல்வி, மணிவண்ணன், சிதம்பரமுருகேஷன், கண்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
AI கேம் சேஞ்சர் விருது..!!
💠நாஸ்காம் அமைப்பினால் நடத்தப்பட்ட Xperience-AI எனும் உச்சி மாநாட்டில் தெலுங்கானா அரசானது AI கேம்சேஞ்சர் என்ற விருதினை வென்றது.
💠‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களைக் கண்காணித்தல்’ எனும் அரசின் முன்னெடுப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
💠ஸ்டார்ட்அப் அவிரோஸ் என்பது இத்திட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பப் பங்குதார அமைப்பு ஆகும்.
நியமனங்கள்
முகமது மொக்பர் ஈரானின் முதல் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்..!!
💠அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அரசுக்கு சொந்தமான அறக்கட்டளையின் தலைவரான இப்ராஹிம் ரைசி ஈரானின் முதல் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
💠முகமது மொக்பர் பல வருடங்களாக செடாட் அல்லது இமாம் கொமெய்னியின் உத்தரவை நிறைவேற்றுவதற்கான அறக்கட்டளைக்கு தலைமை தாங்கினார்.
கேரள உயா்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்..!!
💠கேரள உயா்நீதிமன்றத்துக்கு இரு புதிய நீதிபதிகளை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்தாா்.
💠‘இந்திய அரசமைப்பு சட்டத்தின் 224 இன் பிரிவின் (1) துணைப்பிரிவு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, விஜு ஆபிரகாம் மற்றும் முகமது நியாஸ் சொவ்வாக்கரன் ஆகியோரை கேரள உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக அவா்கள் பதவி ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது.