தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.9.2021 (Daily Current Affairs)

உலகம்

டைனோசர் கால இறக்கை கொண்ட ராட்சத பல்லியின் எச்சம் கண்டெடுப்பு..!

🔷பூமியின் தென் பகுதியில் இருந்து முதன் முறையாக டைனோசர் காலத்தில் வாழ்ந்த இறக்கை கொண்ட ராட்சத பல்லியின் எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

🔷Atacama பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள டெரோசர் (pterosaur) என்று அழைக்கப்படும் இந்த ராட்சத பல்லி சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

🔷Pterosaur ராட்சத பல்லிகள் சுமார் 2 மீட்டர் நீள இறக்கைகள், நீளமான வால் மற்றும் கூரிய மூக்குடன் இருந்தவை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கண்டுபிடிப்பு

நிலவின் பரப்பில் சந்திரயான்-2 புதிய கண்டுபிடிப்புகள்..!!

🔷நிலவை ஆய்வு செய்து வரும் ‘சந்திரயான்-2’ விண்கலம் பல புதிய விஷயங்களைக் கண்டறிந்து, தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

🔷நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை சந்திரயான்-2 கண்டறிந்திருப்பதோடு, நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீா் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளையும் கண்டறிந்து அனுப்பியுள்ளது.

🔷நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான முறையில் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனைக் குறிக்கும் வகையில், ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கு இஸ்ரோ சாா்பில் பெங்களுரு தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்டது.

🔷நிலவின் பரப்பில் நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீா் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளை ‘அகச் சிவப்பு ஸ்பெக்ட்ரோமீட்டா் (ஐஐஆா்எஸ்)’ இதுவரை இல்லாத வகையில் கண்டறிந்து தகவல் அளித்துள்ளது.

🔷நிலவின் மத்திய மற்றும் உயா் அட்சரேகைப் பகுதியில் புறகாற்று மண்டலத்தில் ‘ஆா்கன்-40’ வாயு இருப்பதை சந்திரயான்-2 சுற்றுச்சூழல் ஆய்வு தொகுப்பு கருவி கண்டறிந்துள்ளது. அதுபோல, நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டா் (கிளாஸ்) கண்டறிந்துள்ளது.

🔷நிலவை சா்வதேச தரத்துக்கு படம் பிடித்து வரும் டிஎம்சி-2 கேமரா, நிலவின் பரப்பில் எரிமலை முகடுகள் இருப்பதை மிகத் தெளிவாக அடையாளம் கண்டுள்ளது.

🔷நிலவின் அயனி மண்டலத்தை ஆா்பிட்டரில் இடம்பெற்றிருக்கும் இரட்டை அதிா்வெண் ரேடியோ கருவி ஆய்வு செய்து தகவல் அளித்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ‘பிரதான்’ வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் / ஏவுகணை

செவ்வாய்கிரகத்தில் 2 ஆவது பாறைத் துணுக்கை வெற்றிகரமாக எடுத்தது பெர்சிவரன்ஸ்..!!

🔷செவ்வாய் கிரகத்தில் நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் கலம் வெற்றிகரமாக இரண்டாவது பாறைத்துகளைச் சேகரித்துள்ளது.

🔷இதன் மூலம் சிவப்பு கிரகத்தில் நுண்ணியிரிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

🔷ஜெசேரா க்ரேட்டர் பள்ளத்தாக்கில் உள்ள ரோச்செட்டே என்று பெயரிடப்பட்டுள்ள பாறையில் எடுக்கப்பட்ட பாறைத் துணுக்கு பெர்சிவரன்சில் உள்ள டைட்டானியம் குழாயில் அடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே பாறையில் துளையிட்டு துகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு

செப்டம்பர் 11 ஆம் தேதி மகாகவி நாள் - முதலமைச்சர் அறிவிப்பு..!!

🔷மகாகவி பாரதியாரின் நினைவுநாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

🔷முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசப்பற்று - தெய்வப்பற்று - தமிழ்ப்பற்று - மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

🔷சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

🔷அதனையொட்டி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி, மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் “பாரதி இளங்கவிஞர் விருது” வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

🔷பாரதியின் வாழ்க்கை குறித்தும் படைப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்களுக்குத் தலா 3 லட்ச ரூபாயும் விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக உருவாக்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 37 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷உலகத் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் “பாரெங்கும் பாரதி” என்ற தலைப்பில் நடத்தப்படும் என்றும் பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து வைக்க 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

🔷திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை, உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டு

அமெரிக்க அணிக்காக இந்திய வம்சாவளி வீரர் சதம் அடித்து சாதனை..!!

🔷சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்கா தரப்பில் முதல் சதம் அடிக்கப்பட்டுள்ளது.

🔷ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அல் அமெரெட் மைதானத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா, பபுவா நியு கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

🔷இதில் அமெரிக்க விக்கெட் கீப்பர் Jaskaran Malhotra ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி, 124 பந்துகளில் 174 ரன்கள் சேர்த்தார்.

🔷இந்திய வம்சாவளி வீரரான ஜாஸ்கரன் மல்கோத்ரா அமெரிக்க அணிக்காக சதம் அடித்த முதல் வீரராவார். இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் பபுவா நியூ கினியா அணியை வென்றது.


Share Tweet Send
0 Comments
Loading...