தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.8.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.8.2021 (Daily Current Affairs)

இந்தியா

உலகின் மிகவும் உயரமான விமான சிக்னல் கோபுரம் அமைத்த இந்திய விமானப்படை..!

💠விமானங்களுக்கு சிக்னல் அளிக்கும் உலகின் மிகவும் உயரமான கோபுரங்களில் ஒன்றை லடாக்கின் மலைச் சிகரத்தின் மீது இந்திய விமானப்படை அமைத்துள்ளது.

💠அதி நவீன விமானங்களை இறக்குவதற்கும் ஹெலிகாப்டர்களை கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்த்துவதற்கும் இந்த சிக்னல் கோபுரங்கள் பயன்படும்.

💠லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி , புகுச்சி, நயோமா போன்ற பகுதிகளில் அசல் எல்லைக் கோட்டை சில நிமிடங்களில் எட்டும் வகையில் இந்திய விமானங்களும், அபெச்சி போன்ற ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

💠ரபேல், மிக் 29 போன்றவற்றையும் இங்கு நிறுத்த விமானப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவருக்கு பதவி நீட்டிப்பு..!!

💠தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள “ரேகா சர்மா” அவர்களுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

💠அவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியில் தொடருவார்.

💠தேசிய மகளிர் ஆணையம் என்பது அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பாகும், இது பெண்களைப் பாதிக்கும் அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாகும்.

டெல்லியின் முதலாவது விலங்கு டி.என்.ஏ ஆய்வகம்..!!

💠ரோகினி என்னுமிடத்திலுள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் டெல்லியின் முதலாவது விலங்கு டி.என்.ஏ. ஆய்வகமானது அமைக்கப்பட்டுள்ளது.

💠வனவிலங்குத் தடயவியல் என்பது குற்றவியல் விசாரணைப் பிரிவின் புதிய துறை ஆகும்.

💠பசுவதை, சட்டவிரோதமான விலங்கு விற்பனை மற்றும் இது போன்ற விலங்குகள் தொடர்பான பல்வேறு வழக்குகளை உரிய நேரத்தில் தீர்த்து வைப்பதற்கு டெல்லி காவல்துறையானது இந்த விலங்கு டி.என்.ஏ. ஆய்வகத்தினைப் பயன்படுத்தும்.

தமிழ்நாடு

கோவை ரெயில் நிலையத்துக்கு பிளாட்டினம் விருது..!!

💠தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்ற கோவை ரெயில் நிலையத்துக்கு ‘பிளாட்டினம்’ விருது கிடைத்துள்ளது.

💠சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாக கோவை ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. 'ஏ1’ அந்தஸ்து பெற்ற இந்த ரெயில் நிலையம் ஐ.எஸ்.ஓ., 9001 தர மேலாண்மை சான்றிதழ், ஐ.எஸ்.ஓ., 14001 சுற்றுச்சூழல், ஐ.எஸ்., 18001 பாதுகாப்பு சான்றிதழ் ஆகிய மூன்றையும் ஏற்கனவே பெற்றுள்ளது.

💠‘கிரீன் ரேசியோ’ எனப்படும் பசுமை தரம் முனைப்பில் கடந்த, 2018 ஆம் ஆண்டு முதல், ரெயில்நிலைய வளாகத்தில் சூரியசக்தி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு, ‘மியாவாக்கி’ முறையில் மரம் நடுதல், 100 சதவீ தம் எல்.இ.டி., விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குட்டி பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

💠மேலும், தெற்கு ரெயில்வேயில் முதல் முறையாக, பார்வையற்றோருக்கு ‘பிரெய்லி போர்டு’ நிறுவப்பட்டது. நோயாளிகள், முதியோர் சென்று வர சாய்வு தளம், லிப்ட், எஸ்கலேட்டர், பெண்களுக்கு பாதுகாப்பு, தாய்ப்பால் ஊட்டும் அறை என ஏராளமான அம்சங்கள் 2 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டன.

💠அப்போதைய ரெயில்நிலைய இயக்குனர் சதீஸ் சரவணன், வணிக ஆய்வாளர் சிட்டிபாபு, தற்போதைய துணைநிலை வணிக மேலாளர் லாரன்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு பசுமை தரத்துக்கான கட்ட மைப்பை மேம்படுத்தி, கடந்த ஆண்டு பசுமை தர சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தது. அதன் பிரதிபலிப்பாக, இந்தியாவில் ‘பிளாட்டினம்’ சான்றிதழ் பெற்ற 6 ஆவது ரெயில் நிலையமாகவும்,

💠தெற்கு ரெயில்வேயில் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையையும் கோவை ரெயில் நிலையம் பெற்றுள்ளது.

ஆன்ட்ராய்டு செயலி

PM - DAKSH இணையதளம்..!!

💠மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார் அவர்கள் ‘PM - DAKSH’ எனப்படும் ஒரு இணையதளம் மற்றும் கைபேசிச் செயலியை வெளியிட்டுள்ளார்.

💠இலக்கு நிர்ணயிக்கப்பட்டக் குழுக்களை திறன்மேம்பாட்டுத் திட்டங்களை அணுகச் செய்வதே இதன் நோக்கமாகும்.

💠PM - DAKSH என்பது பிரதான் மந்திரி தக்சதா அவுர் குஷால்டா சம்பன் ஹித்கிரஹி (Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi) யோஜனா என்பதாகும்.


Share Tweet Send
0 Comments
Loading...