தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.6.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 10.6.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு டிஐஜி நியமனம்..!!

🔷தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவுக்கு டிஐஜியாக எஸ்.லட்சுமி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

🔷தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஐஜியாக இருந்த ராதிகா, அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனால் அந்த பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த பணியிடத்துக்கு காத்திருப்போா் பட்டியலில் இருந்த எஸ்.லட்சுமியை நியமித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் உத்தரவிட்டாா்.

சாதனைகள்

மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் எதியோப்பியாவின் லெட்சென்பெட் கிடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

🔷நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் 10,000 மீ. ஓட்டத்தில் லெட்சென்பெட் கிடி மகளிர் 10,000 மீ. ஓட்டத்தை 29:01.03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

🔷கடந்த வருடம் 5,000 மீ ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார். 1993-க்குப் பிறகு 5,000 மீ. மற்றும் 10,000 மீ. என இரு ஓட்டங்களிலும் உலக சாதனை படைத்த வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியா

தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-ஆம் இடம் பிடித்துள்ளது.

🔷புதிய தேசியக் கல்விக் கொள்கையில் 2030-ஆம் ஆண்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தமிழகம் கடந்த கல்வியாண்டிலேயே (2019-2020) இந்த இலக்கை தாண்டியுள்ளது.

🔷2010- 11ஆம் கல்வியாண்டியில் 32சதவீதமாக இருந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து தற்போது 51.4சதவீதமாக உள்ளது.

🔷நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் 75.8சதவீதத்துடன் சிக்கிம் மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 38.8சதவீதத்துடன் கேரள மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

‘இ-சஞ்சீவினி’ மருத்துவ ஆலோசனை சேவையை பெறுவதில் தமிழ்நாடு 2-ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

🔷இணையதளம் வாயிலாக நோயாளிகள் மருத்துவரிடம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் மத்திய அரசால், ‘இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை’ தொடங்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைகளை பறிமாறிக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🔷இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 60 லட்சத்து 7 ஆயிரத்து 525 பேருக்கு, இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை மூலம் இலசவ மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔷இந்த சேவையை பயன்படுத்துவதில் ஆந்திர மாநிலம் 12 லட்சத்து 19 ஆயிரத்து 689 பயனாளர்களுடன் முதல் இடத்திலும், தமிழ்நாடு 11 லட்சத்து 61 ஆயிரத்து 987 பயனாளர்களுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்குமார் ஜெயின் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இரண்டு ஆண்டு கால நீட்டிப்பு பெறுகிறார்..!!

🔷மகேஷ்குமார் ஜெயின் 2021 ஜூன் 22 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

🔷ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக எம்.கே.ஜெயினின் மூன்று ஆண்டு காலம் 2021 ஜூன் 21 அன்று முடிவடைய இருந்தது. தற்போது, ​​மைக்கேல் பத்ரா, எம்.ராஜேஸ்வர் ராவ் மற்றும் ரபி சங்கர் ஆகியோர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களாக பணியாற்றும் மற்ற மூன்று பேர் உள்ளனர்.

அசாம் தனது ஏழாவது தேசிய வனவிலங்கு சரணாலயமாக டெஹிங் பட்காயை அறிவித்தது..!!

🔷புதிய தேசிய பூங்கா, டெஹிங் பட்காய் மழைக்காடு என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது தனித்துவமான மலர் மற்றும் விலங்கியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.

🔷இது 2004 ஆம் ஆண்டில் மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது, அப்போது 111.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு டெஹிங் பட்காய் வனவிலங்கு சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டது.

🔷இப்பகுதியில் ஹூலாக் கிப்பன், யானை, மெதுவான லோரிஸ், புலி, சிறுத்தை, மேகமூட்டப்பட்ட சிறுத்தை, தங்க பூனை, மீன்பிடி பூனை, பளிங்கு பூனை, சாம்பார், பன்றி மான், சோம்பல் கரடி, மற்றும் ஆபத்தான மாநில பறவை, வெள்ளை- சிறகுகள் கொண்ட மர வாத்து உள்ளன.

🔷நாட்டில் இப்போது தேசிய பூங்காக்களில் அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தலா ஒன்பது தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளன.

நியமனங்கள்

அலகாபாத் உயர் நீதிமன்ற நிதிபதியாக சஞ்சய் யாதவ் நியமனம்..!!

🔷இதுதொடர்பான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதி துறை வெளியிட்டுள்ளது. 1986-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பயணத்தை தொடங்கிய அவர் 1999 மார் முதல் 2005 அக்டோபர் வரை வழக்கறிஞராகவும், 2005 முதல் துணை தலைமை வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார்.

🔷அதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2007 ஆண்டிலும், நிரந்தர நீதிபதியாக 2010 ஆண்டிலும் அவர் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

🔷இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 14 வரை அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...