இந்தியா
ரூ.125 சிறப்பு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி..!
💠இஸ்கான் என்ற அமைப்பை நிறுவி பகவத் கீதை உரை உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக நூல்களை எழுதிய பக்தி வேதாந்த அமைப்பின் தலைவர் ஸ்வாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
💠பின்னர் காணொலி மூலமாக அவர் உரை நிகழ்த்தினார். தியானம் மற்றும் பக்தியைக் கொண்டாடும் நாள் இது என்று மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி ஸ்ரீலா பிரபுபாதா ஸ்வாமி மற்றும் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் பக்தர்கள் இந்த மகிழ்ச்சியை உலகம் முழுவதும் கொண்டாடுவதாகக் கூறினார்.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் - அலாகாபாத் உயர்நீதிமன்றம்..!!
💠பசுவை தேசிய விலங்காக அறிவித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமென அலாகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
💠இந்திய கலாசாரத்தில் பசு ஒரு முக்கியமான அங்கம் ஆகும். அடிப்படை உரிமையானது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமின்றி பசுவை வழிபடுபவர்களுக்கும், பொருளாதார ரீதியாக அதைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உண்டு எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
💠பசுக்களின் முக்கியத்துவத்தை ஹிந்துக்கள் மட்டுமன்றி, அவை இந்திய கலாசாரத்தின் முக்கியமான அங்கமென முஸ்லிம் ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டுள்ளனர். மைசூர் ஆட்சியாளராக இருந்த ஹைதர் அலி, பசு வதையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்.
💠ஒரு நாட்டின் கலாசாரம், நம்பிக்கை பாதிக்கப்படுவதால் நாடு பலவீனமடையும் என்பதால், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.
💠விலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு எதிராகவும் அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தியன் வங்கி நிா்வாக இயக்குநராக சாந்தி லால் ஜெயின் பொறுப்பேற்பு..!!
💠இந்தியன் வங்கியின் புதிய நிா்வாக இயக்குநராக சாந்தி லால் ஜெயின் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு, பாங்க் ஆப் பரோடா வங்கியில் 2018 ஆம் ஆண்டுமுதல் செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.
💠அலகாபாத் வங்கியில் 1993 ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தவா். 25 ஆண்டுகளுக்கும் மேலான வங்கிப் பணியில், பல்வேறு முக்கிய துறைகளில் அனுபவம் பெற்றவா்.
💠தலைமை நிதி அலுவலா், பொது மேலாளா், தலைமை இடா் அதிகாரி, தொழில்நுட்பத்துறை தலைமை என்று பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளதாக இந்தியன் வங்கி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
நபாா்டு - தமிழக தலைமை பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா பொறுப்பேற்பு..!!
💠நபாா்டு வங்கியின் தமிழக மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா பொறுப்பேற்றார்.
💠நபாா்டு வங்கியின் தமிழக மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணை செப்டம்பா் 1 அன்று பொறுப்பேற்றார்.
💠1988 ஆம் ஆண்டு நபாா்டு வங்கியில் சோ்ந்த இவா் மும்பை தலைமை அலுவலகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். இவா், தற்போது புதுச்சேரி மற்றும் தமிழக மண்டல அலுவலகங்களின் பொறுப்பாளராக உள்ளதாக நபாா்டு வங்கி தெரிவித்துள்ளது.