சாதனைகள்
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டிரிபிள் ஜம்ப் - வெனிசுலா வீராங்கனை தங்கம் வென்று உலக சாதனை..!
💠டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் மகளிர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெனிசுலா வீராங்கனை 15 புள்ளி 67 மீட்டர் தூரம் தாண்டி உலக சாதனை படைத்தார்.
💠விறுவிறுப்பாக நடந்த பதக்க சுற்றில் இரண்டு முறை உலக சாம்பியன் வென்ற வெனிசுலா வீராங்கனை Yulimar Rojas, தனது 6 ஆவது மற்றும் இறுதி தாண்டலில் 15 புள்ளி 67 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்.
💠கடந்த 1995 ஆம் ஆண்டு உக்ரைன் வீராங்கனை Inessa Kravets 15 புள்ளி 50 மீட்டர் தூரம் தாண்டியதே முந்தைய உலக சாதனையாக இருந்தது.
💠Yulimar Rojas சாதனை படைத்துள்ளது அவருக்கு மட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகளின் இதுவே முதலாவது உலக சாதனையாகும்.
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வென்று சிந்து சாதனை..!!
💠டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
💠பேட்மின்டன் அரையிறுதி ஆட்டங்களில் தோற்ற பி.வி.சிந்து, சீனாவின் ஹே பிங்ஜியாவோ ஆகியோரிடையே வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
💠ஏற்கெனவே மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. பிரேசில் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
💠ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து
💠சீன வீராங்கனை பிங் ஜோ-வை வீழ்த்தி வாகை சூடினார் இந்தியாவின் பி.வி.சிந்து. பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
💠கடந்த ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.
உலகம்
ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்றது இந்தியா..!!
💠ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.
💠ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும், மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன. பாதுகாப்புச் சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஓர் உறுப்பு நாடு தலைமையேற்கும்.
💠அதன்படி ஆகஸ்டு மாதத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்தப் பதவிக்காலத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐநாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
ரியல் எஸ்டேட் வணிக இணையதளம் - முதல்வர் துவக்கிவைப்பு..!!
💠கிரெடாய் ரியல் எஸ்டேட் புதிய இணையதளங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்தியாவின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான அமைப்பின் ஓர் அங்கமான இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு (கிரெடாய்), சார்பில் 2 இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
💠இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்ஸ் அப் செயலியோடு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகை இணையதளம் ஆகும். வாடிக்கையாளரையும், கிரெடாய் விற்பனையாளர்களையும் தொடர்பில் இணைக்கும்.
💠மற்றொரு இணையதளத்தை பொருத்தவரை, வீடு வாங்குவது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே இணையதளமாக இது அமையும் வழக்கறிஞர்கள், டிசைன், வடிவமைப்பாளர்கள், டீலர்கள் என அனைவரது தொடர்புகளையும் இதில் காணலாம்.
💠தற்போதைய நிலவரப்படி, 7.5 கோடி சதுர அடி மதிப்பிலான கட்டுமான திட்டங்களை கிரெடாய் மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமின்றி, சென்னையில் கட்டக்கூடிய ஒவ்வொரு 100 வீடுகளில் 66 வீடுகள் கிரெடாய் நிறுவனத்தால் கட்டப்படுகின்றது.