தமிழ்நாடு
சிவகளைப் பரம்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு..!!
🔷தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மரபணுப் பரிசோதனை செய்வதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுவினர் எடுத்துச் சென்றனர்.
🔷திருவைகுண்டம் அருகே உள்ள சிவகளைப் பரம்பில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
🔷இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறைப் பேராசிரியர் குமரேசன் மற்றும் அவரது குழுவினர் சிவகளைக்கு வந்து முதுமக்கள் தாழிகளை ஆய்வாளர்கள் முன்னிலையில் திறந்து அதனுள்ளே கிடைத்த எலும்புகள், பொருட்கள், மண் ஆகியவற்றைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
நியமனங்கள்
அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்..!
🔷இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாலினா என்கிற பெண்ணை அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
🔷சாலினா என்கிற பெண் பத்தாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் 2007ஆம் ஆண்டு முதல் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2018 முதல் அந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் சாலினாவை மிச்சிகன் மாநிலத்தில் உள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
🔷அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாகத் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
உலகம்
உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் குறியீடு 2021 இல் இந்தியா 20 ஆவது இடம்..!!
🔷ஸ்டார்ட்அப் பிளிங்கின் உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் குறியீடு 2021 இல் இடம் பெற்ற முதல் 100 நாடுகளில் இந்தியா 20 ஆவது இடத்தில் உள்ளது.
🔷2019 ஆம் ஆண்டில் நாடு 17 ஆவது இடத்தில் இருந்தது, அதன் பிறகு அது ஆறு இடங்களைக் குறைத்து 2020 இல் 23 ஆக இருந்தது.
🔷அந்த அறிக்கையின்படி, இந்தியா தனது தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்த அதன் உள்கட்டமைப்பு மற்றும் இணைய வேகத்தை மேம்படுத்த வேண்டும்.
🔷இந்தியா தற்போது உலகளவில் முதல் 1000 இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது, பெங்களூரு (10 ஆவது), புது டெல்லி (14 ஆவது) மற்றும் மும்பை (16 ஆவது) முதல் 20 இடங்களில் உள்ளன.
🔷கடந்த ஆண்டைப் போலவே, அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கனடா மற்றும் ஜெர்மனி ஆகியவை இந்த ஆண்டிலும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய நீச்சல் முதல் வீராங்கனை தகுதி..!!
🔷டோக்கியோ ஒலிம்பிக்கில் 2021 க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் மூன்றாவது நீச்சல் வீரர் என்ற பெருமையை மானா படேல் பெற்றுள்ளார். மானா படேல் அகமதாபாத்தைச் சேர்ந்த பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர். 21 வயதான மானா படேல் 50 மற்றும் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
🔷60 ஆவது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் (2015) 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு படேல் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவில் ஒரு நீச்சல் வீரர் ஒலிம்பில் நுழைந்ததைக் குறித்தது.
🔷மூன்று ஆண்டுகளுக்குப் முன் 2018 ஆம் ஆண்டில், 72 வது மூத்த தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் படேல் மூன்று தங்கப் பதக்கங்களைப் வென்றார். அதே 2018 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடந்த சீனியர் தேசிய போட்டிகளில் படேல் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை கைப்பற்றினார்.
🔷ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் சஜன் பிரகாஷ் நீச்சல் வீரர்கள் தேர்வு பெற்று உள்ளனர்.
🔷மானா படேலுக்கு மத்திய விளையாட்டுதுறை மந்திரி கிரண் ரிஜிஜு டுவிட்டரில் வாழ்த்து தெர்வித்து உள்ளார். "பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர் மனா படேல் டோக்கியோ 2020 க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் 3 ஆவது இந்திய நீச்சல் வீரர் ஆவார், யுனிவர்சிட்டி ஒதுக்கீட்டின் மூலம் தகுதி பெற்ற மானாவை நான் வாழ்த்துகிறேன்.
இராணுவம் / பாதுகாப்பு
குறைந்த நேரத்தில் அதிவேகமாக பாலம் அமைக்கும் வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு..!!
🔷குறைந்த நேரத்தில் அதிவேகமாக பாலம் அமைக்கும் வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
🔷பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து, L&T நிறுவனத்தால் புதிய வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
🔷இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே முன்னிலையில் முதற்கட்டமாக 12 பாலம் அமைப்பு வாகனங்கள் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.