தா. பாண்டியன் நினைவலைகள்

தா. பாண்டியன் நினைவலைகள்

ஏன் ஐயா இவ்வளவு அவசரம்?

தமிழகம் கண்ணீரில் மூழ்கியது என்பதை விட சென்னீரில் மூழ்கியது என்பதே சரியாக இருக்கும். சிவப்பு தூண்டுக்காரர், பொதுவுடைமை போராளி, விளிம்பு நிலை மக்களுக்காக அயராது பாடுப்பட்டவர், இறுதிவரை பொதுவுடைமை கொள்கையில் பின்வாங்காதவர், சிந்தனை சிற்பி, தமிழ் மேலும் தமிழர் நலன் மேலும் தீராத பற்று கொண்ட ஓர் பொதுவுடைமை ஆலமரம் வீழ்ந்தது. உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜிவ்காந்தி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த கம்யூனிச தலைவர்  தா. பாண்டியன் நேற்று காலை  இயற்கை எய்தினார். இந்த நூற்றாண்டில் அரசு மருத்துவமனையில் இறந்த ஒரே தலைவாராக இவர் மட்டுமே இருப்பார்.

"என் சிவப்பு துண்டை எங்கேம்மா.. அத என்கிட்டயே கொடுத்துடுங்கம்மா". இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தா. பாண்டியன் இரவில் கண் விழித்து பார்த்தபோது  தன்னுடைய சிவப்புதுண்டை காணாமல் செவிலியர்களிடம் தன்னுடைய  சிவப்பு துண்டை தன்னிடமே  கொடுக்குமாறு கேட்டு வாங்கியுள்ளார். அந்த அளவிற்கு சிவப்பையும் பொதுவுடைமையையும் நேசித்தவர் தா.பா.

இவர் 1932ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே கீழவெள்ளைமலைப்பட்டி என்னும் ஊரில் தாவீது-நவமணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அழகாப்பா கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வந்த தா. பாண்டியன் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஜீவாவின் மாணவன் மட்டுமல்ல. சிறந்த  நண்பன் தா. பாண்டியன். 1983 முதல் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி அதன் மாநில செயலாளராக இருந்தார். 2000இல் கட்சியை  கலைத்துவிட்டு மீண்டும் தன்னை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். 2005 முதல் 2015வரை மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், இறுதிவரை தேசியக்குழு உறுப்பினராகவும் இருந்தார். 1989 மற்றும் 1991 இருமுறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஆங்கிலப் புலமை மற்றும் தமிழ் புலமை கொண்ட தா. பா இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி போன்றவர்களுக்கு தேர்தலில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பின் போதும் தா. பா மேடையில் இருந்தார். குண்டு வெடிப்பில் தூக்கி வீசப்பட்ட தா.பா படுகாயம் அடைந்தார். அதன் பின் புலிகளின் மேல் கோபம் கொண்டிருந்த தா.பா ஈழ இறுதி போரின் போது முதல்  அரசியல்  தலைவராக வீதியில் இறங்கி போராடத்  துவங்கினார்.

மேலும் மற்ற தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்.

ஜீவாவைப் போல் தா. பாவும் தமிழ் மேல் தீராத  பற்று கொண்ட ஓர் பொதுவுடைமைவாதி. கலைஇலக்கிய பண்பாட்டு இயக்கத்தில் அங்கம் வகித்தார். 8 நூல்கள் எழுதியுள்ளார். ஜீவாவும் நானும் என்னும் நூலின் மூலம் ஜீவாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் தா.பா. பாரதியாரும் பொதுவுடைமைவதியே என்றவர் தா.பா.  சே குவேரா, பிடெல் காஸ்ட்ரோ போன்ற பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...